Monthly Archives: December 2007

(நெருக்கமான) ஆண் உறவினருக்கு பங்கு.

வாரிசுரிமைச் சட்டங்கள். 1041. (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6732 இப்னு அப்பாஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on (நெருக்கமான) ஆண் உறவினருக்கு பங்கு.

வேதத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வீராக!

(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. (18:27)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேதத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வீராக!

பொதுவழிக்கு 7 முழம் இடம் விடு.

1040. நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக) விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். புஹாரி :2473 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பொதுவழிக்கு 7 முழம் இடம் விடு.

அடுத்தவர் நிலத்தை அபகரித்தல்.

1038. ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், ‘அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?’ ‘ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அடுத்தவர் நிலத்தை அபகரித்தல்.

அண்டை வீட்டான் உத்திரம் பதிப்பதைத் தடுக்காதே.

1037. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி), ‘என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அண்டை வீட்டான் உத்திரம் பதிப்பதைத் தடுக்காதே.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! (அல்குர்ஆன்:22:27)

2:125. (“கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக ஆக்கி கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் ‘என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! (அல்குர்ஆன்:22:27)

பங்காளிக்கு சொத்து விற்பது பற்றி….

1036.”பங்காளிக்கே விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது! எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலையில்லை!’ என்று இறைத்தூதர் (ஸல்) விதித்தார்கள். புஹாரி :2257 ஜாபிர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பங்காளிக்கு சொத்து விற்பது பற்றி….

வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது.

1035. ”(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி :2087 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது.

அளவு எடை தவணை குறிப்பிட்ட பொருளுக்கு….

1034. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக் கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும்!” என்றார்கள். புஹாரி :2240 இப்னு அப்பாஸ் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அளவு எடை தவணை குறிப்பிட்ட பொருளுக்கு….

கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.

1033. ”நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தம் இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்!” புஹாரி :2068 ஆயிஷா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.