1037. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்” என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி), ‘என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்” என்று கூறுவார்கள்.
புஹாரி :2463 அபூஹூரைரா (ரலி).