வாரிசுரிமைச் சட்டங்கள்.
1041. (பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6732 இப்னு அப்பாஸ் (ரலி).