Monthly Archives: December 2007

மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

1055. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்” என்றனர். புஹாரி :1388 ஆயிஷா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..

மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்

மரண சாசனம்

1052. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2738 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) .

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரண சாசனம்

ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….

1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். புஹாரி 2625 ஜாபிர் (ரலி). 1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2626 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….

தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.

1048. என்னை என் தந்தையர் (பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்.என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.

அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

1047. தன் அன்பளிப்பைத் திரும்பப்பெறுபவன் வாந்தியெடுத்தப் பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2589 இப்னு அப்பாஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.

மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?

கேள்வி எண்: 57. எந்த ‘இரு சப்தங்கள் மறுமையில் சபிக்கப்பட்டதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?

அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.

1045. இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.

மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.

1044. கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.

கலாலா சொத்து பற்றி….

1042. நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கலாலா சொத்து பற்றி….