Monthly Archives: September 2006

சகோதரா! நன்மையை அள்ளக்கூடிய மாதம் வந்து விட்டது!

2:183. ஈமான் (நம்பிக்கை) கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு (விரதம்) விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) (விரதம்) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சகோதரா! நன்மையை அள்ளக்கூடிய மாதம் வந்து விட்டது!

உளுச் செய்யும் முறை………

135-உதுமான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இருகைகளையும் மூட்டு வரை மூன்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on உளுச் செய்யும் முறை………

வானங்களையும் பூமியையும் படைத்தோனே!

யூஸுஃப் நபி (அலை) ‘இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.” … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வானங்களையும் பூமியையும் படைத்தோனே!

தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…

பாடம் – 2 சுத்தம் 134- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாதவரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். புகாரி- 6954:அபூஹூரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…

சத்தியம் Vs அசத்தியம்

அ(ல்லாஹ்)வன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சத்தியம் Vs அசத்தியம்

இசையும் இசைக் கருவிகளும்

மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். எதற்காகவெனில் அவர்கள் எவ்வித அறிவுமின்றி (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அதை ஏளனம் செய்வதற்காகவும் தான்” (31:6). இவ்வசனத்திலுள்ள மன மயக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்பதன் கருத்து பாடல்களே என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on இசையும் இசைக் கருவிகளும்

ஆயிரத்தில் ஒருவர்……..

133- (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் (உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள் என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் எத்தனை நரகவாசிகளை? என்று கேட்பார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஆயிரத்தில் ஒருவர்……..

கேள்வி கணக்கு கடினம் சிலருக்கு ஏன்?

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கேள்வி கணக்கு கடினம் சிலருக்கு ஏன்?

சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!

132- நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!

பலஹீனர்களே! செவிமடுப்பீர்!

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது: தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன்: 22:73)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on பலஹீனர்களே! செவிமடுப்பீர்!