Category Archives: தினம் ஒரு வசனம்
அல்லாஹ்வின் வல்லமையின் வெளிப்பாடு
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன்: 6:96)
நிச்சயமாக வியாபாரம் வட்டியை போன்றதா?
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில் – நியாயத் தீர்ப்பு நாளில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய் எழ மாட்டார்கள்) இதற்குக் காரணம் “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, (ஆகுமாக்கி) வட்டியை ஹராமாக்கி (ஆகுமானதல்ல) இருக்கின்றான். ஆயினும் யார் தன் … Continue reading
சிதறுண்டு போகும் அசத்தியம்!
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (அல்குர்ஆன்: 21:18)
அவனை துதி செய்யாத பொருள் பூமியில் உண்டா
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அ(ல்லாஹ்)வனை துதி செய்து கொண்டு இருக்கின்றனர்; இன்னும் அ(ல்லாஹ்)வன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக அ(ல்லாஹ்)வன் பொறுமையுடையோனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 17:44)
வறுமையும் பிணியும் ஏன்?
நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 7:94)
இவர்கள் தெய்வங்களா?
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் (இயேசுவையும்) தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் (அல்லாஹ்) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்: 9:31)
அவனே உங்கள் அல்லாஹ்!
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் – எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன்: 6:95)
நோவினை செய்யும் வேதனை என்ற நன்மாராயம்!
ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் … Continue reading
உருவம் இல்லாமலேயே நீ தங்கியிருந்த இடம்!
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 6:98)
நபியே நீர் கூறும்!
(நபியே!) நீர் கூறும்: ”உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. … Continue reading