Category Archives: எச்சரிக்கை

திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது

  மனித உரிமைகளுக்கு அல்லாஹ்விடம் அதிக முக்கியத்துவம் உண்டு. ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறினால் தவ்பா செய்வதம் மூலம் பரிகாரம் பெறலாம். ஆனால் மனித உரிமைகளில் தவறிழைத்தால் அந்த (மறுமை) நாள் வருவதற்கு முன் அவற்றை நிறைவேற்றாத வரை தப்பிக்க முடியாது. அந்நாளில் விவகாரம் திர்ஹமையோ, தீனாரையோ கொண்டு தீர்க்கப்பட மாட்டாது. … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமில்லாமல் கடன் கேட்பது

தேவையின்றி யாசகம் கேட்பது

‘ஒருவன் தனக்குப் போதுமான அளவு வசதி இருந்தும் யாசகம் கேட்டால் அவன் நரகத்தின் கங்குகளையே அதிகப்படுத்திக் கொள்கிறான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யாசகம் கேட்காத அளவுக்கு போதுமான வசதி என்றால் என்ன?’ எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஒரு பகல், ஓர் இரவு உண்பதற்குப் போதுமான அளவு’ என்று கூறினார்கள். … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on தேவையின்றி யாசகம் கேட்பது

பிள்ளைகளிடையே பாரபட்சம்

அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் சிலர் தங்களுடைய பிள்ளைகளில் சிலரை விடுத்து சிலருக்கு மட்டும் அன்பளிப்புகள், வெகுமதிகள் வழங்குகின்றனர். ஷரீஅத் ரீதியிலான தக்க காரணம் இல்லையெனில், சரியான கூற்றின் பிரகாரம் இவ்வாறு செய்வது ஹராமாகும். உதாரணமாக தம் பிள்ளைகளில் ஒருவனுக்கு மற்ற பிள்ளைகளூக்கு ஏற்படாத ஒரு தேவை ஏற்பட்டு விட்டதெனில் – உதாரணமாக அவன் நோயாளியாக … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on பிள்ளைகளிடையே பாரபட்சம்

வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

வேலைக்காரனுக்கு அவனுடைய உரிமையை (கூலியை) விரைவாக வழங்கிட நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். ‘வேலைக்காரனுக்கு அவனுடைய வேர்வை உலர்வதற்குள் கூலியை கொடுத்து விடுங்கள்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம். முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு அநியாயங்களில் தொழிலாளர்கள், பணியாளர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை வழங்காதிருப்பது ஒன்றாகும். இதற்குப் பல்வேறு … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

மக்களிடையே பெரும் செல்வாக்கும் அந்தஸ்தும் ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடையாக எப்பொழுது ஆகுமெனில் அதற்காக அவன் நன்றி செலுத்தும் போதுதான். முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த செல்வாக்கைப் பயன்படுத்துவது இவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். ஏனெனில் ‘உங்களில் யாரேனும் தன் சகோதரனுக்கு நன்மை செய்ய முடிந்தால் செய்யட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் பொதுவாகக் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on பரிந்துரைக்காக அன்பளிப்புப் பெறுதல்

நிலத்தை அபகரித்தல்

இறையச்சம் இல்லாமல் போய் விடுமானால் சக்தியும் உபாயமும் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கே கேடாகி விடுகிறது. அவற்றை, பிறரின் பொருள்களை அபகரிப்பது போன்ற அக்கிரமத்திற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த அக்கிரமத்தைச் சார்ந்ததுதான் நிலங்களை அபகரித்தல். இதன் முடிவு மிகப் பெரிய துன்பத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். ‘ஒரு ஜாண் அளவு நிலத்தை அநியாயமாக ஒருவன் அபகரித்தால் இறுதி … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on நிலத்தை அபகரித்தல்

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்

திருடுதல்

அல்லாஹ் கூறுகிறான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்” (5:38) திருட்டுக் குற்றங்களில் மிகப்பெரும் குற்றம் பழமையான அல்லாஹ்வின் ஆலயத்தை ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்களிடம் திருடுவதாகும். இத்தகைய திருடர்கள் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on திருடுதல்

சூதாட்டம்

அல்லாஹ் கூறுகிறான்: “ஈமான் கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், குறி பார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்” (5:90) அறியாமைக் காலத்து மக்களிடம் சூதாட்டம் பல விதங்களில் இருந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த பிரபலமான ஒரு விதம் வருமாறு: ஒரு ஒட்டகத்தில் பத்து … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on சூதாட்டம்

ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்

அல்லாஹ் கூறுகிறான்: “இறைநம்பிக்கை கொண்டோரே! ஜும்ஆ நாளில் தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பக்கம் விரைந்து செல்லுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் இது உங்களுக்கு சிறந்ததாகும்” (62:9) சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on ஜும்ஆவின் பாங்கிற்குப் பிறகு வியாபாரம் செய்தல்