Author Archives: Jafar
நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.
1260. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள். புஹாரி : 5527 அபூதலபா (ரலி).
பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.
வேட்டையாடுதல், அறுத்தல், உண்ண அனுமதிக்கப்பட்டவைகள். 1254. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?’ என்று கேட்டேன். … Continue reading
பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.
1251. ”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1804 அபூஹுரைரா (ரலி). 1252. ”நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, … Continue reading
நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.
1249. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி). 1250. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் … Continue reading
அறப்போரில் உயிரைத் தத்தம் செய்தோர் பற்றி..
1247. ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி … Continue reading
கடற்பயண அறப்போர்.
1246. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் (ரலி), உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் … Continue reading
ஒருவன் முஸ்லிமாவது எப்போது?
மிகவும் எளிது! தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அல்லாஹ் எனும் ஏக இறைவனை தவிர்த்து வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்! எனும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முஸ்லிமாகிறார். இவ்வாறு பறைசாற்றுவதன் மூலம் அவர், இறைத்தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டு வந்த இறைவேதங்கள் அனைத்தின் … Continue reading
செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே…
1245. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் … Continue reading
அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.
1243. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு … Continue reading
நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!
கேள்வி எண்: 75. அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக.