Author Archives: Jafar
விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..
1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து … Continue reading
உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.
1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).
பூமியில் இறைவேதனையைக் கண்டும் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே
‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126) (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக் … Continue reading
சபையில் வலப்புறம் பேணுதல்.
1318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) … Continue reading
குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.
1316. (குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:154 அபூகதாதா (ரலி). 1317. (என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். புஹாரி :5631 துமாமா பின் … Continue reading
ஷைத்தானின் சகோதரர்கள் யார்?
கேள்வி எண்: 80. “வீண் விரயம் செய்யாதீர்கள், வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவார்கள்” என்ற பொருளுடைய திருமறை வசனம் எது?
நின்று கொண்டு குடித்தல்.
1315. நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள். புஹாரி : 1637 இப்னு அப்பாஸ் (ரலி).
உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.
1313. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!” என்று கூறினார்கள். அதன் பிறகு … Continue reading
மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.
1310. இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், … Continue reading
பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.
1309. அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். புஹாரி : 5605 ஜாபிர் (ரலி).