Author Archives: Jafar
அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?
கேள்வி எண்: 84. நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?’ எனக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தை கூறுக.
அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.
1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).
கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.
1372. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் ‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனுடைய வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்” என்றார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) … Continue reading
கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.
1371. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து … Continue reading
நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி). 1364. ”(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று … Continue reading
இஸ்லாம் முழங்குவது எதனை?
வணக்கத்துக்குரிய ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கும்படி இஸ்லாம் அழைக்கின்றது. மேலும், தன்னுடைய அறிவு ஞானத்தைக் கொண்டு சிந்தித்து உணருமாறு மனிதனுக்கு திரும்ப திரும்ப கட்டளையிடுகின்றது. இஸ்லாம் பரவிய ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே உலகின் மாபெரும் நாகரிகங்களும், பல்கலைக்கழகங்களும் வளமானதொரு வாழ்வை நோக்கி நடைபோடத் துவங்கின. “அறிவைத் தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமை” … Continue reading
யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.
1362. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3462 அபூஹுரைரா (ரலி).
ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.
1361. ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். புஹாரி : 5846 அனஸ் (ரலி).
காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.
1360. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன். புஹாரி :475 அப்பாஸ் பின் தமீம் (ரலி).
காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.
1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி). 1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு … Continue reading