கேள்வி எண்: 84. நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?’ எனக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தை கூறுக.
பதில்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.
‘நான் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விடத்தில் பாவங்களில் கொடியது எதுவென வினவினேன். ‘அல்லாஹ்வே உம்மைப் படைத்திருக்க அவனுக்கு நீர் இணை கற்பிப்பதாகும் எனக் கூறினார்கள். நான் ‘இதுவோ மிகப்பெரியது. இதற்கடுத்தது எது? என அவர்களிடம் வினவினேன். ‘நீர் உம் குழந்தையை அவனும் உம்முடன் உண்ண வந்து விடுவானோ என அஞ்சிக் கொல்வதாகும்’ என்று கூறினார்கள். ‘பிறகு எது?’ என வினவினேன். ‘அண்டை வீட்டான் மனைவியுடன் விபச்சாரம் செய்வதாகும்’ என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம். (மேலும் பார்க்க அல்குர்ஆன் வசனம்: 25:68)