Author Archives: Jafar
வீணான நம்பிக்கைகள்
அல்லாஹ் பலனை ஏற்படுத்தாத பொருட்களில் பலன் இருப்பதாக நம்புதல் இதுவும் ஷிர்க்காகும். உதாரணமாக சிலர் ஜோதிடர் அல்லது சூனியக்காரனின் ஆலோசனையின் பேரில் அல்லது முன்னோர்களின் வழக்கத்தின் அடிப்படையில் கயிறு, உலோக வளையம், சிப்பி, தாயத்து, தகடு போன்றவற்றில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் கண் திருஷ்டிக்காகவும், துன்பம் நீங்குவதற்காகவும் அது வராமல் தடுப்பதற்காகவும் அவற்றை தங்களுடைய … Continue reading
சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?
படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி’ என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் … Continue reading
சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் ‘தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்’ அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.
நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை வைத்தல்
அதாவது சம்பவங்களிலும் மனிதர்களின் வாழ்விலும் நட்சத்திரங்களின் தாக்கம் இருப்பதாக நம்புவது. இதுவும் ஷிர்க்காகும். ஸைத் பின் ஹாலித் (ரலி) அறிவிப்பதாவது: ‘ஹுதைபிய்யா எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். இரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை முன்னோக்கி, உங்கள் இறைவன் என்ன கூறினான் தெரியுமா? என வினவினார்கள். … Continue reading
சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்
பரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும். சூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்பாகும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: “(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்” … Continue reading
ஹராமை ஹலாலாகவும் ஹலாலை ஹராமாகவும் ஆக்குதல்
இன்று பரவலாகக் காணப்படக்கூடிய மிகப் பெரும் இணைவைத்தலுக்கு மற்றொரு உதாரணம் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாகவும் அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராமாகவும் ஆக்குவது. அல்லது ஹலால், ஹராம் ஆக்குகின்ற இந்த உரிமை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கும் இருக்கிறது என்று நம்புவது. அல்லது அஞ்ஞான காலத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்களையும் சட்டங்களையும் நாடிச் சென்று முழு திருப்தியுடனும் விருப்பத்துடனும் வழக்குத் தொடுப்பது. … Continue reading
ஷபாஅத்தின் வகைகள்
ஷபாஅத் என்னும் பரிந்துரைத்தல் இரு வகைப்படும். ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும், இவர்களைப் போன்ற அறிவீனமான மக்களிடையிலும் அறியப்பட்டிருந்த ஷபாஅத். இதை இறைவன் அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கி விட்டான். இரண்டு: அல்லாஹ்வின் அனுமதி பெற்றதன் பின்னர் கோரப்படும் ஷபாஅத். இதை அல்லாஹ் உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான். இந்த ஷபாஅத் அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும், ஸாலிஹீன்களுக்கும் வழங்கப்படும். மறுமையில் சிருஷ்டிகள் நபி (ஸல்) … Continue reading
நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.22:66. இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு … Continue reading
சமாதி வழிபாடு
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: “உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23) அதுபோல இறந்து … Continue reading
நல்லுபதேசம் எதற்காக?
7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு (த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) … Continue reading