Author Archives: Jafar

ஞானம் குறித்து….

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல் குர்ஆன்: 2:269)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஞானம் குறித்து….

கவனித்துப் பாருங்கள்..!

‘வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்’ என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக! எனினும், ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா. (அல்குர்ஆன் 10:101)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கவனித்துப் பாருங்கள்..!

இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவன் யார்?

இந்தப் பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும்; அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும்; இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 27:61)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவன் யார்?

சூரியஒளியில் பிரகாசம்பெற்றுப் பிரதிபளிக்கும் சந்திரன்

“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.” (அல்குர்ஆன் 71:16)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சூரியஒளியில் பிரகாசம்பெற்றுப் பிரதிபளிக்கும் சந்திரன்

கோள்கள் பால்வீதியில் தவழும் அமைப்பு பற்றி..

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (அல்குர்ஆன் 25:61)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கோள்கள் பால்வீதியில் தவழும் அமைப்பு பற்றி..

இறைவனின் ஏற்பாடு

வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 15:16)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனின் ஏற்பாடு

ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி..

இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி..

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்

கண்மூடி பின்பற்றாதீர்!

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66-67)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கண்மூடி பின்பற்றாதீர்!

அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…

87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…