Author Archives: Jafar

இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உவமை!

இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 18:45)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உவமை!

பூமியின் ஓஸோன் வாயுமண்டலம்

கேள்வி எண்: 11. பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சூரியனின் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) பூமியின் மீது படாதவாறு ஓஸோன் எனும் வாயு மண்டலம் கூரையாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றிய சத்தியத் திருமறையின் கூற்றாகிய “வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்” என்ற வசனம் திருமறையில் எங்குள்ளது? மேலும் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமியின் ஓஸோன் வாயுமண்டலம்

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

146- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை அடர்த்தியாக வளரவிடுங்கள் மீசையை ஒட்ட நறுக்குங்கள். புகாரி-5892: இப்னு உமர் (ரலி) 147-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள் தாடியை வளரவிடுங்கள். புகாரி-5893: இப்னு உமர் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்

படைத்தவன் Vs படைக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். (அல்குர்ஆன்:16:20)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on படைத்தவன் Vs படைக்கப்பட்டவர்கள்

ஃபித்ரத் (இயற்கை மரபுகள்) பற்றி…

145- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயேகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஜந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும். புகாரி-5889: அபூஹூரைரா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஃபித்ரத் (இயற்கை மரபுகள்) பற்றி…

நற்போதனைகளுக்கு செவிசாய்க்காத இதயம்

பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 7:100)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நற்போதனைகளுக்கு செவிசாய்க்காத இதயம்

தூக்கத்திலிருந்து விழிக்கும் போது……

144- நபி (ஸல்) அவர்கள் இரவு (தூக்கத்திலிருந்து) விழிக்கும் போது தங்கள் வாயைக் குச்சியால் சுத்தம் செய்வார்கள். புகாரி-245: ஹூதைஃபா (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தூக்கத்திலிருந்து விழிக்கும் போது……

வழிகேட்டில் வெகுதூரம் சென்ற வழிகேடர்கள்

நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்துக் கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் வழிகெட்டுச் சென்று விட்டார்கள். (அல்குர்ஆன்: 4:167)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வழிகேட்டில் வெகுதூரம் சென்ற வழிகேடர்கள்

3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

நாங்கள் பாவங்கள் செய்த பாவிகள். ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர்கள் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத் தருவார்கள் என சிலர் கூறுகின்றனர். நாம் பாவங்கள் நிறையச் செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on 3. வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே!

எவ்வாறு மிஸ்வாக் செய்வது?

143-நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் சென்றிருந்தேன் அப்போது அவர்கள் தமது கையிலுள்ள ஒரு குச்சியால் பல் துலக்கும் போது உவ், உவ் என்று சொல்வதை நான் கண்டேன். குச்சியோ அவர்களது வாயில் இருந்தது. இவ்வாறு செய்தது அவர்கள் வாந்தி எடுப்பது போல் இருந்தது. புகாரி-244: அபூ முஸா அஷ்அரி (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on எவ்வாறு மிஸ்வாக் செய்வது?