Author Archives: Jafar
நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!
152- நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும் தலை முடி சீவுவதிலும் சுத்தம் செய்வதிலும் அவர்களுடைய எல்லா விஷயங்களையும் வலது புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். புகாரி-168: ஆயிஷா (ரலி)
மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்!
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (அல்குர் ஆன்: 18:48)
மறைவிடங்களைச் சுத்தம் செய்வதுபற்றி….
151-உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விடவேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலக் கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-153: அபூ கதாதா (ரலி)
இவ்வுண்மையை நீங்கள் செவியேற்க வேண்டாமா?
(நபியே! – தூதரே) நீர் கூறுவீராக: “கியாம (இறுதி) நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு (ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 28:71)
மாதவிடாய் சட்டங்கள் (பகுதி-2)
கடமையான, நஃபிலான தொழுகைகளை தொழுவது ஹராம். ; இது போன்றே தொழுகைக்குரிய நேரத்தில் பூரணமான ஒரு ரக்அத்தின் நேரத்தை அவள் அடைந்திருந்தால் அவளின் மீது அத்தொழுகை கடமையாகும். அப்படி அவள் அடைந்து கொண்டது தொழுகையின் ஆரம்ப நேரமாக இருந்தாலும் சரியே. அல்லது அதன் கடைசி நேரமாக இருந்தாலும் சரியே. ஆரம்ப நேரத்திற்கு உதாரணம்: சூரியன் மறைந்த … Continue reading
இப்னு உமர் (ரலி)யின் கூற்று!
150-ஹப்ஸா (ரலி)வின் வீட்டுக் கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையை பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தமது (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். புகாரி-149: இப்னு உமர் (ரலி)
இவ்வுண்மையை நீங்கள் நோக்க வேண்டாமா?
“கியாம நாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 28:72)
நீர் உம்முடைய தேவைக்காக…..
149- ‘நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்” என … Continue reading
தொடர்ந்து பின் முற்றுபெற்ற வஹீ!
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன்: 4:163)
மல ஜலம் கழிக்கும் போது….
148- நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாக ஆக்கியோ பின்பக்கமாக ஆக்கியோ உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன் நோக்குங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அறிவித்து விட்டுத் தொடர்ந்து நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் … Continue reading