Author Archives: Jafar
தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுதல்..
389– உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள் என்று தோழுர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித் தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். … Continue reading
ஜமாஅத்தாக தொழ வெகுதொலைவிலிருந்து வருவதன் சிறப்பு
388– யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகிறாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட நன்மை அதிகம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-651: அபூமூஸா (ரலி)
ஈமானின் நிலைகள்-மலக்கு(வானவர்)களை நம்புவது
(நம்முடைய) தூதர் தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட(வேதத்)தை விசுவாசிக்கின்றனர். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை படுத்திவிட மாட்டோம் (என்றும்) மேலும் (இரட்சகனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். இன்னும் (உன் கட்டளைக்கு) நாங்கள் … Continue reading
ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..
387– ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்திகின்றான்: … Continue reading
தொழுபவரின் ஆடை பிறர் மீது படுதல்..
386– நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும் போது, சில வேளை அவர்களுடைய ஆடை என் மீதுபடும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள். புகாரி-379:மைமூனா (ரலி)
தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..
384– நான் நபி(ஸல்)அவர்கள் இடத்தில் அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமுகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்து விட்டது. மழைக்காலங்களில் எனக்கும் என் சமுகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும் … Continue reading
வல்லமையும், அல்லாஹ்வின் அதிகாரமும்!
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது” (அல்குர்ஆன்: 55:33)
சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்
இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் … Continue reading
தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் அவசியம்..
380– ஒருவர் தனியாக தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின் போது பகல்நேர மலக்குகளும் இரவுநேர மலக்குகளும் ஒன்று சேருகிறார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்து விட்டு, நீங்கள் விரும்பினால் நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன் சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது (17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள். புகாரி-648: … Continue reading
ஸுப்ஹூ தொழுகையின் நேரம்..
377– மூமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது. புகாரி-578: ஆயிஷா(ரலி) 378– நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள். … Continue reading