Author Archives: Jafar
3.கல்வியின் சிறப்பு
பாகம் 1, அத்தியாயம் 3, எண் 57 ‘நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்”ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பாகம் 1, அத்தியாயம் 3, எண் 58 (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் … Continue reading
சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே!
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் … Continue reading
2.ஈமான் எனும் இறைநம்பிக்கை
பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8 ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) … Continue reading
1. இறைச்செய்தியின் ஆரம்பம்
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1 ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) … Continue reading
ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு – நூல் அறிமுகம்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் … Continue reading
எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…
பர்தாவைப் பற்றி பத்தாம்பசலி தனமாக பேசுகின்றவர்களுக்கு சகோதரி ஜெஸிலா அவர்களின் அனுபவம் கவிதை நடையில் சாட்டையடியாக சுழல்கிறது. “கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ? கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?” விபச்சார பார்வை பார்க்கும் ஆண்களுக்கு ஏதோ ஒன்றால் அடித்தது போலான வார்த்தை பிரயோகம். “வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும் உழைப்புக்கு … Continue reading
தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.
600.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்புபகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் … Continue reading
தானங்களில் சிறந்தது.
599.பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 2629 அபூஹுரைரா (ரலி)
உழைத்து தானம் செய்தல்.
598.தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப் (ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், ‘(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டு … Continue reading
சக முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பிஸ்மில்லாஹ்! அன்பின் மார்க்க சகோதரர்களுக்கு… இறைவனை, அவனுடைய தூதரை, மறுமையை, இன்னும் பல மறைவானவற்றை நம்ப மறுக்கும் நம்பிக்கையற்றவர்கள் (காஃபிர்கள்) செய்கின்ற இவ்வுலக காரியங்கள் யாவும் இவ்வுலக பயனை மட்டுமே கருத்தில் கொண்டதாகும். அதனால் இரு சமுதாயங்களுக்கிடையே துவேசத்தை தூண்டி அதில் குளிர்காயும் கேடுகெட்ட மனிதர்கள் இணையம் என்னும் இந்த … Continue reading