Tag Archives: வேதம்
அத்தியாயம்-6 நபி ஈஸா (அலை) மர்யம் அவர்களின் மைந்தர். (பகுதி-2) (JESUS SON OF MARY)
இரத்தத் தியாகம் செய்து எல்லாப் பாவங்களிலிருந்தும் மொத்தமாக விடுதலை வாங்கித் தருவதல்ல நபி ஈஸா (அலை) அவர்களின் பணி. நபி ஈஸா (அலை) அவர்கள் இதற்காக அனுப்பப்பட்டவர்களும் அல்ல. மக்களுக்கு இறைவனின் நேர்வழியைக் காட்டி, நல்லொழுக்கத்தைக் கற்பித்து, மரத்துப்போன அம்மக்களின் மனதைப் பண்படுத்தி, அவர்களின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பாவங்களைத் துடைத்திடவே நபி ஈஸா (அலை) அவர்கள் … Continue reading
அத்தியாயம்-2 சில அடிப்படை கோட்பாடுகள்.
நம்பிக்கை: (ஈமான்) இறைவன் ஒருவனே என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என்றும் நம்புகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்று நம்மில் பலர் எண்ணலாம். ஆனால் நம்பிக்கை (ஈமான்) என்பது இத்துணை குறுகியதன்று. அது இதனினும் விசாலமானது. ஈமான் என்பது சில சடங்கு, சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. பெயரளவில் வைக்கப்படுகின்ற நம்பிக்கை ஈமானாகி விடாது. ஈமான் … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)
உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார். 1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார். இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். … Continue reading
96. இறைவேதத்தையும் நபிவழியையும்…
பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் … Continue reading
72. (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்
பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5475 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, … Continue reading
[பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை.
அல்லாஹ்வின் வார்த்தையுடன்… அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்: அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் … Continue reading
நீதியையும், நீதிமான்களையும் நேசிக்கும் அல்லாஹ்!
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி … Continue reading
அல்லாஹ் தன் அடியானை எச்சரிக்கும் பல வகையான மன இச்சைகள்!
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. 3:14. பெண்கள், ஆண் மக்கள்; … Continue reading
குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?
கேள்வி எண்: 112. குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ? என்று குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? இந்த வசனத்தின் பொருள் என்ன?
கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் … Continue reading