Tag Archives: பலன்
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.
செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே…
1245. செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் … Continue reading
ஓதிப் பார்த்தல்
ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.