Tag Archives: பக்தி
அத்தியாயம்-3 இதரத் தொழுகைகள், துஆக்கள், குறிப்புகள்
குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்படும் தொழுகைகள் மேலே கூறப்பட்ட தொழுகைகளைத் தவிர, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுவதற்கான தொழுகைகளும் இருக்கின்றன. இவைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்திருக்கின்றார்கள். அச்சந்தர்ப்பங்கள்:
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.
1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும். 2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு … Continue reading
அத்தியாயம்-3 வெள்ளிக்கிழமைத் தொழுகை (ஜும்ஆத் தொழுகை)
இதுவரை நாம் தினமும் நிறைவேற்றிட வேண்டிய தொழுகைகளைப் பார்த்தோம். இப்போது வாரம் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையைப் பார்ப்போம். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி வரும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தத் தொழுகையையும் கண்டிப்பாக நிறைவேற்றிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதைத் தவறவிடக் கூடாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தத் தொழுகை நடைபெறும். இது … Continue reading
மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.
இறை நேசர்கள்.(1)
மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். … Continue reading