Tag Archives: சொந்தம்
அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.
உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை.
நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்
நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் … Continue reading
இறைவன் அனுமதித்தவை
எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: … Continue reading
வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் … Continue reading