Tag Archives: சமீபம்
மறைமுகமான பிரார்த்தனை
பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் … Continue reading
மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.
‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து
நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.
இறை நேசர்கள் (2)
வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் … Continue reading