Tag Archives: அறிஞர்கள்
அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)
திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)
11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார். ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, … Continue reading
66. குர்ஆனின் சிறப்புகள்
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980 அபூ … Continue reading
அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகள்
மனிதர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நினைத்தால் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட துஆக்களால் அல்லது திருமறையிலிருந்தும் பெருமானாரிடமிருந்தும் அறியப்பட்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். இத்தகைய துஆக்களை எடுத்துரைத்து பிரார்த்திப்பதில் சந்தேகமின்றி நிறையப் பலாபலன்களை காண முடிகிறது. இந்த துஆக்களினால் மனிதன் நேரான வழியைப் பெறுகிறான். அன்பியாக்கள், ஸித்தீகீன்கள், ஷுஹாதாக்கள், ஸாலிஹீன்கள் இவர்கள் வழியும் இதுதான். நபி (ஸல்) அவர்கள் … Continue reading
சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?
படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி’ என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் … Continue reading
சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் ‘தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்’ அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.
வினாவும் விடையும்
வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.
நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?
முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், … Continue reading