Tag Archives: அன்பளிப்பு பொருட்கள்
ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….
1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். புஹாரி 2625 ஜாபிர் (ரலி). 1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2626 அபூஹுரைரா (ரலி).
தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.
1048. என்னை என் தந்தையர் (பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்.என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று … Continue reading
நபி குடும்பத்தாருக்கு அன்பளிப்பு தர்மப்பொருட்கள்…
648. பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள். புஹாரி : 1495 அனஸ் (ரலி) 649. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா … Continue reading