Tag Archives: அடிப்படைகள்
அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.
உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை.
முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்
ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் … Continue reading