Tag Archives: விசுவாசம்
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (1)
இதுபோன்று தான் சிருஷ்டிகளைக்* கொண்டு ஆணையிட்டுத் தம் தேவையை வேண்டுவது. இதுவும் விலக்கப்பட்ட செய்கையாகும். படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும் வெறுத்திருக்கிறார்கள். சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்து இன்னொரு சிருஷ்டியிடம் கேட்பது கூடாதெனின், அதே சிருஷ்டியைக் கொண்டு படைத்தவனிடம் ஆணையிட்டுக் கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால் தம் … Continue reading
பாங்கின் பிரார்த்தனை!
நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு … Continue reading
இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்றே!
தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும் போதித்து வந்த ஒரேவழி நாம் விளக்கிக் காட்டிய இதே இஸ்லாம் ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச் செய்கைகளை இஸ்லாமியச் செய்கைகள் எனக்கருதி எவர் செயல்பட்டாலும் அவை இஸ்லாத்திற்குப் புறம்பான செய்கைகள் என்றே கருதப்படும். இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்: “இஸ்லாத்தைத் … Continue reading
ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.
இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு … Continue reading
இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்
அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் … Continue reading
சிலைகளை சிருஷ்டிகள் என்று ஒப்புக்கொள்ளல்.
அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களும் இருக்கின்றனர் எனக்கூறி இறைவனுக்கு இணை கற்பித்த முஷ்ரிக்குகள் தாம் கற்பித்த துணை கடவுள்களைப் பற்றி அவையும் சிருஷ்டிக்கப்பட்ட படைப்பு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை ஏற்றிருந்தனர். இருந்தும் அவற்றிற்குக் கீழ்படிந்து வணக்க வழிபாடுகள் செலுத்துவதினால் அவை தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து அவனுடன் நெருங்கிய தொடர்பை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையில் அத்தகைய … Continue reading
பாடம் – 4
தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை. தவ்ஹீத் எனும் ஏக தெய்வக் கொள்கை மூன்று அம்சங்களைக் கொண்டது. 1. தவ்ஹீத் அர் ருபூபிய்யா – அல்லாஹ்வின் ஆதிபத்தியத்தில் ஏகத்துவம். அகிலங்களுக்கெல்லாம் அதிபதி ஒருவனே என்றும் அவனே அதனைப் படைத்தவன், நிர்வாகிப்பவன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், பாதுகாவலன் என்றும் அவன்தான் அல்லாஹ் என்ற உறுதியான நம்பிக்கை.
பாடம்-1
இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம். லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும். முதலாவது: எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. … Continue reading