Tag Archives: நோன்பு
94. எதிர்பார்ப்பு
பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7226 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் … Continue reading
90. தந்திரங்கள்
பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் … Continue reading
84. சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்
பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6608 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள். பாகம் 7, அத்தியாயம் 84, எண் 6609 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்லாஹ் … Continue reading
73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்
பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். … Continue reading
67. திருமணம்
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5063 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே … Continue reading
இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.
இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது … Continue reading
கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!
1878. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).
ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.
722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ”நபி (ஸல்) அவர்கள் … Continue reading
தொடர்ந்து நோன்பு நோற்க தடை.
714. ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) ‘என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!” நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘இது … Continue reading
ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.
711. ”(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த … Continue reading