பாடம் – 11

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6)

“ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை அவரை எந்தத் தீங்கும் அணுகாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவித்ததாக ஹவ்லா பின்த் ஹாகிம் தெரிவிக்கிறார். ஆதாரம்: முஸ்லிம்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கை சார்ந்த ஒரு செயலாகும்.

இப்படிப்பட்ட காரியங்களின் உதவிகள் மூலம் உலகலாவிய ஒரு சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், லாபமும், வெற்றியும் பெறவோ அல்லது சில தீங்குகளை அல்லது நஷ்டங்களை விட்டும் பாதுகாப்புப் பெறவோ சிலருக்கு முடிந்த ஒரே காரணத்தால் இக்காரியங்களில் ஈடுபடுவது ஷிர்க்கை விட்டும் நீங்கியவை என்று ஒருவரும் கருதக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஹதீஸின் ஆதாரத்தின் மூலம் அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனுடைய படப்பினங்களல்ல என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதன் அடிப்படையில் படைப்பினங்களின் பாதுகாப்பை நாடும் காரியம் ஷிர்க்காகும்.

மேற்குறிப்பிட்ட துஆ மிகச்சிறியதாயினும் பெரும் மகத்துவம் மிக்கது.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 11

பாடம் – 10

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும்.

“இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.” என அல்லாஹ் கூறுகின்றான். (76:7) Continue reading

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 10

பாடம் – 9

அல்லாஹ்வைத் தவிர ஏனையவர்களின் பெயரில் மிருகங்களை அறுத்தல்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும் என (நபியே!) நீர் கூறுவீராக. அவனுக்கு யாதோர் இணையுமில்லை; (துணையுமில்லை) இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்; இன்னும் (அவனுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறுவீராக.)’ அல்குர்ஆன்:6.162-163.

‘ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.’ அல்குர்ஆன்:108.2.

அலி இப்னு அபிதாலிப் பின்வருமாறு சொன்னார்கள்: ‘அல்லாஹ்வின் நான்கு தீர்ப்புகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் எனக்குத் தெரிவித்தார்கள். அவையாவன:

1. அல்லாஹ்வைத் தவிர ஏனையவற்றின் பெயரில் அறுத்து குர்பானி செய்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

2. தன் பெற்றோர்களை சபிப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;

3. அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய செயலை புகுத்தும் ஒருவனுக்கு அடைக்கலம் கொடுப்பவனை அல்லாஹ் சபிக்கிறான்;

4. காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்யும் ஒருவனை அல்லாஹ் சபிக்கிறான்;

‘ஒரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால் சுவர்க்கம் சென்றான். இன்னொரு மனிதன் ஒரு கொசுவின் காரணத்தால்நரகம் சென்றான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அது எப்படி சாத்தியமானது யா ரசூலல்லாஹ்!’ என ஸஹாபாக்கள் வினவினார்கள். ‘தாம் வணங்கும் சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும் வரை, அதனை கடந்துச் செல்ல அனுமதி கொடுக்காத மக்கள் வாழ்ந்த இடத்தை இருவர் கடக்க நேரிட்டது. ஒரு மனிதரிடம் அந்த சிலைக்கு ஏதேனும் காணிக்கை செலுத்தும்படி அவர்கள் கட்டளையிட்டனர். ‘காணிக்கை செய்ய என்னிடம் எதுவும் இல்லை’ என அவன் கூறினான். ஒரு ஈ அல்லது கொசுவாயினும் காணிக்கை செலுத்துமாறு அவர்கள் சொல்ல அவன் அந்த சிலைக்கு ஒரு கொசுவை காணிக்கை செய்தான். அக்காரணத்தால் அவன் நரக நெருப்பில் நுழைந்தான். மற்ற மனிதரையும் அச்சிலைக்கு எதையேனும் காணிக்கை செய்யும்படி வற்புறுத்திய போது ‘மகத்துவமும், கீர்த்தியுமிக்க அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும், எதற்கும், எதையும் காணிக்கை செய்ய மாட்டேன்’ என அவர் மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட அந்த மக்கள் அவரை கொலை செய்தார்கள். அந்த மனிதர் சுவர்க்கம் சென்றடைந்தார்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தாரிக் பின் ஷிஹாப் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வுக்கன்றி ஏனையவற்றிற்கு தானம் அல்லது குர்பான் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம்.

தன் பெற்றோர்களை சபிப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம் (ஒருவர் மற்றவருடைய பெற்றோரை சபித்தால், அவர் கோபம் கொண்டு இவருடைய பெற்றோரை சபிப்பார்).

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை புகுத்தும் முஹ்தித் ஒருவருக்கு அடைக்களம் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம். இஸ்லாமிய மதத்தில் மாற்றம் செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளதாகும்.இதில் தலையிட்டு இஸ்லாத்தில் பித்ஆவை புகுத்தும் ஒருவருக்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவருக்கு அடைக்களமும் கொடுப்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

காணிகளின் எல்லையை காட்டும் அடையாளங்களை மாற்றம் செய்து, அடுத்தவரின் இடத்தை வஞ்சகமாக பிடித்துக் கொள்பவருக்கு அல்லாஹ்வின் சாபம்.

ஒரு அற்ப கொசு எனினும் மகத்தான பாடம்.

ஒரு கொசுவை விக்கிரகத்திற்கு தானம் செய்து, நரகத்திற்குச் சென்ற மனிதன் நாட்டமின்றியே அதனை செய்தார். அதுவும் விக்கிரகங்களை வணங்குபவர்களின் ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அதனை செய்தார்.

வெளிப்படையான ஒரு செயலையே காஃபிர்கள் செய்ய சொன்னாலும் அதனைக் கூட செய்ய மறுத்த மற்ற மனிதர் பொறுமையுடன் மரணத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம். இறை அச்சம் உள்ளவர்களுக்கு ஷிர்க் எவ்வளவு வெருப்பான செயல் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

நரகம் புகுந்த மனிதன் ஒரு முஸ்லிமாகும். அந்த மனிதன் காஃபிராக இருந்தால் ஒரு அற்ப கொசுவின் காரணமாக நரகம் புகுந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள்.

‘நீங்கள் காலில் அணியும் காலணியை கட்டும் நாடாவை விட உங்களுக்கு மிக அருகில் சுவர்க்கம் உள்ளது. நரகமும் அதைப் போன்றதே’ என்ற நபிமொழியை இந்த சம்பவம் உறுதிப் படுத்துகிறது.

முஸ்லிமின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே விக்கிரக வணக்கம் புரிபவர்களின் முக்கிய நோக்கமாகும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 9

உலக வாழ்வில் நெருங்கிய நண்பன்.

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

43:38. எதுவரை என்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும் போது (ஷைத்தானிடம்): “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

43:39. (அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலக வாழ்வில் நெருங்கிய நண்பன்.

பாடம் – 8

மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்.

உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத் (என்னும் பெண் விக்கிரகத்)தையும் நீங்கள் கண்டீர்களா?’ (53:19-20) Continue reading

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 8

பாடம் – 7

ருகா (மந்திரம் ஓதல்), தாயத்து, துஆக் கூடு முதலியவைகளை அணிதல்.

அல்லாஹ்வின் தூதருடன் (ஸல்) ஒரு பயணத்தில் சென்றபோது வில்கயிறு அல்லது வேறெவற்றையும் கொண்டு ஒட்டகங்களின் கழுத்தில் கட்டப்படும் மாலைகள் யாவும் வெட்டியெறியப்பட வேண்டும் என அறிவிக்குமாறு ஒருவரை நபி (ஸல்) அனுப்பினார்கள். என் அபு பஷிர் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:  புஹாரி, முஸ்லிம்.

‘அர்ருகா, அத்திமாயிம், அத்திவாலா, ஆகிய அனைத்தும் ஷிர்க்கான காரியங்களாகும்’ என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத், அபுதாவுத். Continue reading

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 7

மனிதனில் தராதரங்கள் ஏன்?


43:26. இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;

43:27. “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்) . அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்று கூறியதையும் நினைவு கூறுவீராக)!

43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.

43:29. எனினும், இவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.

43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள (மக்கா, மதினா) பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?”

43:32. உம் இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரை விட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.

43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்): ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தான்.

அல் குர்ஆன்: அஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மனிதனில் தராதரங்கள் ஏன்?

பாடம் – 6

நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும்.

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் கூடியவையா? என்று நீர் கேட்பீராக. அல்லாஹ் எனக்கு போதுமானவன். (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுவீராக’ (39:38) Continue reading

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 6

தன் படைப்புகளிடத்தில் தேவைகளற்ற இறைவன்.

17:7. “நீங்கள் நன்மை செய்தால் அது உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுகே கேடாகும்”.

3:176. “நிராகரிப்பால் அவர்கள் விரைந்தோடுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது”.

14:7-8. “இதற்காக நீங்கள் எனக்கு நன்றி செலுத்தினால் நான் என்னுடைய அருளை பின்னும் நான் உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும். மேலும் நபி மூஸா தம் மக்களை நோக்கி நீங்களும் உலகிலுள்ள மக்கள் யாவரும் இறைவனுக்கு முற்றிலும் மாறு செய்த போதிலும் அவனுக்கொன்றும் நஷ்டமேற்பட்டு விடாது. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் இல்லாதவனும், புகழுக்குரியவனுமாக இருக்கிறான்”.

27:40. “எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”.

39:7. “நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”.

41:46. “எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தன் படைப்புகளிடத்தில் தேவைகளற்ற இறைவன்.

பெரும்பான்மைக்கு ஏதேனும் மதிப்புண்டா?

6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத் தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் – அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.

7:187. அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வருமென்று வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது – அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது – எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக.

9:69. (நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்கு கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன – அவர்கள் தான் நஷ்டவாளிகள்.

12:40. “அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்கு சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.

25:50. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.

30:6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பெரும்பான்மைக்கு ஏதேனும் மதிப்புண்டா?