அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!

10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் ‘அஸ்லிம்’ நீர் (எனக்கு முற்றிலும்) வழிப்படும் எனக்கூறிய சமயத்தில், அவர் (எவ்விதத் தயக்கமுமின்றி) ‘அகிலமனைத்தின் இரட்சகனாகிய உனக்கு இதோ நான் இஸ்லாமாகி விட்டேன் (வழிப்பட்டேன்) என்று கூறினார்”  Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , , , , , , , , , , | Comments Off on அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுபவரே முஸ்லிம்!

[பாகம்-17] முஸ்லிமின் வழிமுறை.

அண்டை வீட்டாருடன் நடந்து கொள்வது.

அண்டை வீட்டாருக்குரிய உரிமைகளையும் ஒழுக்கங்களையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை முழுமையாகப் பேணி நடப்பது ஒவ்வொரு அண்டை வீட்டாரின் மீதும் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். (4:36)

அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணுமளவிற்கு. அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) என்னிடம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வையும் மறுமையயும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-17] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-16] முஸ்லிமின் வழிமுறை.

உறவினர்களுடன் நடந்து கொள்வது.

ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் தந்தையிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.

இரத்த பந்தமுடையவர்கள் முஃமின்களாக இருந்தாலும் காஃபிர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இரத்தபந்தமுடையவர்களாகவே கருத வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழ்வதும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்வதும் கடமையாகும்.

அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , | Comments Off on [பாகம்-16] முஸ்லிமின் வழிமுறை.

[பாகம்-15] முஸ்லிமின் வழிமுறை.

மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள்

கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும்.

1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

“அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34)

ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் அவளை சபிக்கின்றார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

2. அவள் தனது கண்ணியத்தையும் தன் கணவனது மான மரியாதையையும் பாதுகாப்பதோடு கணவனது பொருள் அவனது பிள்ளைகள் மற்றும் வீட்டிலுள்ள அனைத்து காரியங்களையும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-15] முஸ்லிமின் வழிமுறை.

முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்

பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது – அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.

பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருபால் உறவுக்காரர்களோ பெரும்பாலும் தங்களது சுய அடையாளத்தைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது.

சமூகத்தால் ஒதுக்கப்படுவோமோ, இழிவுபடுத்தப்படுவோமோ, தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவோமோ என்ற அச்சம் காரணமாகவே ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் தம்முடைய பாலியல் நாட்டத்தை வெளியில் சொல்லாமல் மூடிவைத்திருக்கின்றனர்.

ஆனால் தாம் உறவுக்காரர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கின்ற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறர்கள்.

பிரிட்டனில் நாஸ் என்ற அரசு சார தொண்டு நிறுவனம் தெற்காசிய பூர்வீகம் கொண்ட பிரிட்டிஷ் ஒருபால் உறவுக்காரர்களுக்கு உதவிவருகிறது.

தமது அமைப்பின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காகி விட்டது என்று நாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் குரெய்ஷி கூறினார்.

ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் – திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.

ஒரு சில இமாம்களும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.

பெருமளவில் வெளியில் வராமல் இருந்து விடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்களிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த இமாம்கள் ஏதோ ஒருவகையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.

நன்றி: BBC Tamil

மேலுள்ள செய்தி இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்த முஸ்லிம்களுக்கு நிச்சயம் பாரதூரமான செய்தியாகவே இருக்கும். இறை வேதத்தை அல்லாஹ் நாடிய அளவு கற்றவர்கள் நிச்சயம் இந்த செயல் இறை வரம்பை மீறுதல் என்றே கவலைக் கொள்வர். இந்த ஒருபால் சேர்க்கை செயலை சரிகாணும் இவர்கள் நிச்சயம் பெயரளவிலான முஸ்லிம்களே. சரி இஸ்லாத்தை விளங்கிய இமாம்கள் எவ்வாறு இதற்கு துணைப்போக முடியும்? நிச்சயம் இந்த இமாம்கள் லூத் (அலை) அவர்களின் மனைவியின் பண்பைச் சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும். Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , | Comments Off on முஸ்லிம்களில் ஒருபால் உறவுக்காரர்களா? அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

[பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும்.

1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19)

அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவ்வாறு அவளை பக்குவப்படுத்த வேண்டும்.

முதலில் அவளைத் திட்டாமல், ஏசாமல், கேவலப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை கூறவேண்டும். அதற்கவள் கட்டுப்படவில்லையென்றால் படுக்கையிலிருந்து அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அவளை அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது. அடிக்கும்போது இரத்தம் வந்து விடக் கூடாது. அவையங்களுக்குக் கேடு வந்து அவை செயல்பாடுகளை இழந்துவிடக் கூடாது. Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , , | Comments Off on [பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

97. ஓரிறைக் கோட்பாடு

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 97. ஓரிறைக் கோட்பாடு

96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268

தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7269

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பாக ஏகத்துவ உறுதிமொழியைக் கூறினார்கள். பிறகு ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் (கூறுகிறேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக் கொண்டு உங்கள் தூதரை வழி நடத்தினானோ அதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்; நேர்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நேர் வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்’ என்றார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 96. இறைவேதத்தையும் நபிவழியையும்…

95. தனிநபர் தரும் தகவல்கள்

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும் படியும்) கட்டளையிடுங்கள்’ என்றார்கள். மேலும், ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால்  உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7247

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on 95. தனிநபர் தரும் தகவல்கள்

94. எதிர்பார்ப்பு

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7226

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருக்க மாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்ப்டடு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7227

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டுப், பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் இச்சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன் வைத்து சாட்சியம் கூறுகிறேன். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 94. எதிர்பார்ப்பு