ஈமானின் நிலைகள் – மறு பிறவி – மறுமை வித்தியாசம் (பாகம்- 1)

ஒவ்வொரு பிறவிக்கும் தனித்தனி வாழ்க்கை (பிறப்பு, இறப்பு வாழ்க்கை) 

ஒரே வாழ்க்கை (ஒரே பிறப்பு ஒரே இறப்பு)

கருவறை வாழ்க்கை, உலக வாழ்க்கை, திரை வாழ்க்கை, மறுமை

வாழ்க்கை)மீண்டும் எழுப்பபடுவது

17:49. இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

17:50. (நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.

17:51. ”அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). ”எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். ”உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். ”அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்” என்று கூறுவீராக!  


22:5.
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

31:28. (மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.

37:11. ஆகவே, ”படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

75:4. அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

36:79. ”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

36:80. ”பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.

36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ”குன்” (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

உயிர் வாங்கப்படுதல் (நல்லடியார் உயிர் வாங்கப்படுதல்)

சூரியனைப்போல் பிரகாசமாக உள்ள மலக்குகள் தலைக்கு மேல் நிற்கின்றார்கள். சொர்க்கத்தின் நறுமணம் உள்ள துணி கையில் வைத்துள்ளார்கள். தோல் பையில் இருந்து நீர் வெளியாவது போல் உயிர் பிரிதல் ரூஹை எடுத்துக்கொண்டு வானத்திற்கு செல்லுதல். இல்லீயீன் என்ற நல்ல அடியார்களின் ஏட்டில் பதிவு மீண்டும் ரூஹை உடலுக்கு அனுப்பபடுதல்.

கேள்வி-பதில்

1. இறைவன் யார்? 2. உன் மார்க்கம் எது? 3. உனக்கு அனுப்ப பட்ட தூதர் யார்? 4. அத்தூதரை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய். (அவரின் அமல்) ஒளிமிக்க ஒரு மனிதர் வடிவில் வருதல். சுவர்க்கத்தின் விரிப்புகள் விரிக்கப்படுதல். சொர்கத்தின் கதவு திறக்கப்படுதல். கப்ர் விசாலமாகுதல்.

தீயவர்களின் நிலை

கருப்பு நிறம் உள்ள மலக்குகள், துர்நாற்றம் உள்ள கம்பளி ஆடை. ரூஹ் வாங்கும் போது அது உடலில் ஓடி ஒளிகின்றது. மெல்லிய துணியை முள்ளில் இருந்து எடுப்பது போல் உயிர் வாங்கப்படும். பிணத்தின் வாடையைப் போன்று துர் நாற்றம். வானம் திறக்கப்படாது.

7:40. எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.

பாவிகளின் (ஸிஜ்ஜீன்) ஏட்டில் பதியப்படுதல். வானத்தில் இருந்து வீசி எறியப்படுதல்.

22:31. அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.

கேள்வி : முன்பு போல் 4 கேள்விகள்

பதில் : எனக்கு தெரியவில்லை என்று கதருதல், கோரமனிதர் வருவார் அது அவரின் அமல் நரக விரிப்பு. நரக வாசல் திறக்கப்படுதல். கப்ர் நெறுக்குதல். விலா எழும்பு ஒன்று சேர்கப்படுதல். பரா பின் ஆஸிப்(ரலி) நூல் : அஹ்மத்

நபிமார்கள் வானத்தில் இருப்பது

மிஃராஜ் சம்பவம் ஷஹிதுகளின் நிலை : அர்ஷின் பச்சை கிளி போல்.எரிப்பது, தண்ணீரில் இறப்பது, புதைக்கப்படாமல். மற்றவைகள்

இறந்தவருக்கு கஃப்ரில் தண்டனைக் கொடுக்கப்படுகிறது கஃப்ரில் நல்ல நிலையில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இறந்தவர்கள் வானத்தில் இருப்பது சொர்க்கத்திற்கு சென்று வருவது. இதனை இவ்வாறே ஏற்றுக்கொள்வது.

திரை வாழ்க்கை

40:45. ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.

40:46. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ”ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).

ரூஹ் பற்றிய வசனங்கள்

17:85. (நபியே!) ”உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். ‘ரூஹு’ என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

கப்ரில் பதில் சொல்லுதல்

14:27. எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.

8. கப்ர்களிலிருந்து எழுப்பப்பட்ட பின் ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கப்படுவோம் என்று நம்புவது

மறுமை நாளின் பெயர்கள்.

1. யெவ்மித்தீன் – தீர்ப்பு நாளின் அதிபதி 1:3

2. அல்ஆஹிரா – அடுத்து 2: 4

3. யெவ்முல்கியாமா – எழுப்பப் படும் நாள் 2:85

4. தாரூல் ஆஹீரா – மறுமை வீடு 2:94

5. யெவ்முல் ஆஹீர் – இறுதி நாள் 2:177

6. யெவ்முல் ஹஸ்ரா – கைசேதப்படும் நாள் 19:39

7. யெவ்முல் பஹ்ஸ் – எழுப்பபடும் நாள் 30:56

8. யெவ்முல் பஸ்ஸில் – பறிக்கும் நாள் 37:21

9. அஸ்ஸாஹா – அந்த நேரம் 6:31

10. யெவ்முல் தலாப் – சந்திக்கும் நாள் 40:15

11. யெவ்முல் ஆஸிஃபா – சமீபத்திய நாள் 40:18

12. யெவ்முல் ஹிஸாப் – கேள்வி கணக்கு நாள் 40:22

13. யெவ்முத் தனாத் – அழைக்கும் நாள் 40:32

14. யெவ்முல் ஜமாத் – ஒன்றிணைக்கும் நாள் 50:20

15. யெவ்முல் வயீத் – வாக்களிக்கப்பட்ட நாள் 50:20

16. யெவ்முல் குலூத் – நிரந்தர நாள் 50:34

17.
யெவ்முல் குரூஜ் – வெளியாகும் நாள் 50:42

18. அல் வாக்கியா – அந்நிகழ்ச்சி 56:1

19. அத்தஹாபுன் – நஷ்டநாள் 64:9

20. அல் ஹாக்கா – நிச்சயமானது 69:1-3

21. அல் ஹாரியா – திடுக்கிடும் செய்தி 69: 4

22. அத்தாமத்துல் குபரா – மாபெரும் அமளி 79:34

23. அஷாஹா – பயங்கரச சத்தம் 80:33

24. அல் ஹாஸியா – சூழ்ந்துக் கொள்ளக்கூடியது. 88:1

மறுமையின் அடையாளங்கள்

பார்க்க : முந்தைய பதிவு. கியாமத்து நாளின் பத்து (10) அடையாளங்கள்.

மறுமை வருவதற்குரிய அடையாளங்கள்

1. கல்வி உயர்த்தப்படும்

2. மடமை அதிகரிக்கும்

3. விபச்சாரம் அதிகமாகும்

4. மது அருந்துதல் அதிகமாகும்

5. ஆண்கள் குறைந்த எண்ணிக்கையில்(ஒரு ஆணுக்கு 50 பெண்கள் வீதம்) பெண்கள் அதிகமாவார்கள். புகாரி, முஸ்லிம் அனஸ் (ரலி)

6. பொய்யர்கள் அதிகமாவார்கள். நூல் : முஸ்லிம்.

7. அமானித மோசடி (தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டால் மறுமையை எதிர்பார்) நூல் : புகாரி . அபூஹுரைரா(ரலி)

8. செல்வம் அதிகமாகும் (ஜக்காத்தைப் பெறுபவர் ஒருவர் கூட இருக்கமாட்டார். அரபு உலகம் பசுமையாக்கப்படுதல்.) நூல் : முஸ்லிம் . அபூஹுரைரா(ரலி)

9. ஜனாதிபதி (கணகற்று வழங்குவது) பணக்காரராக இருப்பது. நூல் முஸ்லிம் . ஜாபிர்(ரலி)

10. மார்க்கத்தைப் பின்பற்றும் போது கடும் சோதனை ஏற்படும். நூல் :முஸ்லிம். அபூஹுரைரா(ரலி)

11.ஹிஜாஸ்(மக்கா, மதினா)பூமியில் நெருப்பு வெளியாகும். நூல் : புகாரி. முஸ்லிம். அபூஹுரைரா(ரலி)

12. வெள்ளி தங்கம் புதையல் கிடைக்கும் பெரிய தூண்களாக கிடைக்கும். அதை எடுத்துக் கொள்ள 100 பேர் சண்டையிட்டு 99 பேர் இறந்து விடுவார்கள். கடைசியாக அந்த ஒரு நபரும் அது எனக்கு தேவை இல்லை என்று எடுக்காமல் சென்று விடுவார். (எடுப்பதில் கௌரவம் பார்த்து) நூல் : புகாரி. முஸ்லிம். அபூஹுரைரா(ரலி)

13. காலம் நெருக்கமாதல் (வருடம் மாதம் போல் மாதம் நாள் போல் நாள் ஒரு மணிநேரம் போல் ஒரு மணி நேரம் தீப்பொறிமாதிரி ) நூல் : திர்மிதி அனஸ் (ரலி)

14. வனவிலங்கு மனிதர்களிடம் பேசுதல். நூல் : திர்மிதி அபுஸைத்குத்ரி(ரலி)

15. தஜ்ஜால் வருகை

16. புகை மூட்டம்

17. விலங்கு (வருதல் அதிசயப்பிராணி)

18. சூரியன் மேற்குத் திசையில் உதித்தல்.

19. ஈஸா (அலை) வருகை

20. யஹ்ஜுஜ் – மஹ்ஜுஜ் வருகை

21. யமன் தேசத்தில் நெருப்பு வெளியாகுதல்.

22. கிழக்கில் பெரும் பூகம்பம் நூல் : முஸ்லிம். குதைபா பின் உஸைத்(ரலி)

23. அடிமைப் பெண் எஜமானியைப் பெற்று எடுத்தல்.

24. செருப்பு இல்லாத ஆடு, மாடு மேய்த்தவர்கள் உயர்ந்த மாளிகை கட்டுவது நூல் : புகாரி. முஸ்லிம். இப்னு உமர்(ரலி).

25. சிலைகள் வணங்கப்படாத வரை மறுமைநாள் வராது. (இரவு. பகல் போகாது. லாத், ஊஸா வணங்கப்படும்.) நூல் : புகாரி, ஆயிஸா(ரலி)

26. சூர் ஊதுவது இரண்டு தடவை இரண்டுக்கும் மத்தியில் இடைவெளி 40 (வருடம், மாதம், நாள்….) மழை மனிதனை உயிர்ப்பித்தல் முதுகு எலும்பு மட்டும் மக்கிபோகாமல் இருப்பது. நூல் : புகாரி, முஸ்லிம் அபூஹுரைரா(ரலி).

27. பூமியை ஒரு கையிலும் வலதுகையால் வானத்தையும் சுருட்டி நான்தான் அரசன் எங்கே பூமியின் அரசர்கள்? பெருமையடிப்பவர்கள் எங்கே? அடக்கி ஆள்பவர்கள் எங்கே? என்று அல்லாஹ் கேட்பான். இப்னு உமர்(ரலி)

14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,

39:7. (அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன். மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.

28. மறுமையில் எழுப்பப்படுதல் செருப்பு இல்லாதவர்களாக, நிர்வாணமாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக எழுப்பப் படுவார்கள்.

21:104. எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம்.

முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இபுராஹிம் (அலை).

29. மார்க்கத்தில் பித்அத் செய்தவர்களை நரகத்திற்கு இழுத்துச் செல்லுதல் ஈஸா(அலை) கூறியது போன்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிடுவார்கள். நூல் : புகாரி, முஸ்லிம். இபுனு அப்பாஸ்(ரலி).

மஹ்ஸர்.

மறுமை நாளில் மனிதர்கள் செருப்பு இல்லாமல் வெறுங்காலுடன் நிர்வாணமாக. விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக எழுப்பப் படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களே ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பார்க்கமாட்டார்களா என்று ஆயிஷா(ரலி) கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆயிஷாவே சிலர் சிலரை பார்ப்பதைவிட அன்றைய நிகழ்ச்சி மிகக் கடினமானது என்று கூறினார்கள். நூல் : புகாரி. முஸ்லிம் ஆயிஷா(ரலி)

மற்றொரு அறிவிப்பில் 21:104 வசனத்தை ஓதிகாண்பித்தார்கள்.

தலையால் நடப்பது

அல்லாஹ்வின் தூதரே(ஸல்) அவர்களே மறுமை நாளில் காஃபிர் எவ்வாறு முகத்தின் மீது எழுப்பப்படுவான்? என்று ஒரு மனிதர் கேட்டார் அதற்கு நபி(ஸல்) இவ்வுலகில் இரண்டு கால் மீது நடக்க வைக்கும் சக்தி உடையவனுக்கு மறுமை நாளில் முகத்தின் மீது நடக்க வைக்கும் சக்தி இல்லையா என்று கேட்டார்கள். நூல் : புகாரி . அனஸ்(ரலி).

வியர்வை

மறுமை நாளில் சூரியன் ஒரு மைல் தூரத்திற்கு கொண்டு வரப்படும் அப்போது மனிதர்கள் தங்களுடைய அமலுக்கு ஏற்றவாறு வியர்வையில் மூழ்கி இருப்பார்கள். சிலருக்கு கரண்டைக்கால் வரை, சிலர் முழங்கால் வரை, இன்னும் சிலர் இடுப்பு வரை இன்னும் சிலர் முழுமையாக இது வரை என்று சொல்லி விட்டு வாயின் பக்கம் கையை சைகை செய்தார்கள். நூல் : முஸ்லிம் .. மிக்தாத்(ரலி)

ஆயிரத்தில் ஒருவரே சொர்க்கம் செல்வார்.

ஆதமே என்று அல்லாஹ் அழைப்பான் கட்டுப்பட்டேன் சரணடைந்தேன் என் கையிலே அனைத்து நல்லறங்களும் உள்ளன. அப்போது அல்லாஹ் நரக கூட்டத்தை வெளியாக்குவாயாக என்று கூறுவான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் நரக கூட்டம் என்றால் என்ன என்று கேட்பார்கள். ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் நரகிற்கு செல்வார்கள் என்று அல்லாஹ் கூறுவான். அன்றைய தினத்தில் தான் சிறியவர்கள் நரைத்தவர்களாகவும் வயோதியகமானவர்களாகவும் மாறிவிடுவார்கள். (22:1-2) நூல் : புகாரி , முஸ்லிம். அபுஸைத்ல்குத்ரி(ரலி)

22:1. மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.

22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

அல்லாஹ் தன்னுடைய கரண்டைக் காலை வெளியாக்குதல்.

அல்லாஹ் தனது கரண்டைக்காலை வெளியாக்குவான் முஃமினான ஒவ்வொரு ஆண், பெண்னும் ஸஜ்தா செய்வார்கள் இவ்வுலகில் முகஸ்துதி பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஸஜ்தா செய்தவர்களைத் தவிர. ஸுஜுது செய்ய செல்வார்கள் ஆனால் அவர்கள் முதுகு (பலகைப்போல்) வளையாமல் இருக்கும். நூல் : புகாரி, முஸ்லிம் அபுஸைத் அல் குத்ரி(ரலி)

68:42. கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.

மனிதர்களின் எடை

கொழுத்த பெரிய மனிதர் மறுமை நாளில் வருவார் அவர் அல்லாஹ்வின் முன் ஒரு ஈ யின் இறக்கை அளவிற்கு கூட எடை இருக்க மாட்டார் என்று கூறிவிட்டு இந்த வசனத்தை படியுங்கள் என்றார்கள்.

18:5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.

கேள்வி – கணக்கு

விசாரணை:  மறுமை நாளில் கேள்வி கணக்கு கேட்கப்படக் கூடிய எவரும் அழியாமல் இருக்க முடியாது (நரக வாதியாக ஆகிவிடுவார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது அவன் மிக எளிதாக கேள்வி கேட்பான் என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் அது (வசனத்தில் கூறப்பட்டது) கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது பற்றியாகும். ஆனால் யார் துருவி துருவி விசாரிக்கப்படுகிறானோ அவன் அழிந்து விடுவான். நூல் : புகாரி . முஸ்லிம் ஆயிஷா(ரலி).

84:8 அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

இறைவனோடு உரையாடுதல்.

உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வுடன் பேசுவர். அவருக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் மொழிபெயர்பாளரோ திரையோ இருக்காது வலது புறமும் இடது புறமும் தான் முற்படுத்திய செயல்களே இருக்கும். அவனுக்கு எதிரே நரகம் இருக்கும் ஒரு பேரித்தம் பழத்தின் ஒரு கீற்றைக் கொண்டாவது நரக வேதனையை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள். நூல் புகாரி , முஸ்லிம் அதிப் பின் ஹாத்திம்(ரலி)

சாட்சி கூறுதல்

நூஹ் நபி (அலை) அவர்கள் மறுமையில் கொண்டு வரப்படுவார்கள் நீங்கள் (தூதுச் செய்தியை) எடுத்துச் சொல்லி விட்டீர்களா என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் ஆம் என் இறைவனே என்று கூறுவார்கள் உடனே அவர்களுடைய சமுதாயத்தினரிடம் இவர் உங்களுக்கு தூது செய்தியை சொல்லி விட்டார்களா என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள் (பாவிகள்) எங்களுக்கு எச்சரிக்கையாளர் யாரும் வரவில்லை என்று கூறுவார்கள் அப்போது நூஹ் நபியிடம் உங்களுடைய சாட்சி யார்? என்று கேட்கப்படும் அதற்கு முகம்மது நபி(ஸல்) அவர்களும் அவர்களுடைய உம்மத்தினரும் என்று சொல்வார்கள். உங்களை (நம்மை) கொண்டு வரப்படும் நூஹ் நபி(அலை) அவர்கள் தூது செய்தியை முழுமையாக சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள் என்று கூறிவிட்டு 2:143 வசனத்தை ஓதிகாட்டினார்கள்.

2:143 இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீனாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

கௌஸர்; – நீர்தடாகம்

(அதன் நீளம்) என்னுடைய தடாகத்தின் நீளம் ஒரு மாதம் நடக்கும் தூரமாகும் அதன் அகலமும் அது போன்றதே அதன் தண்ணீர் பாலைவிட வெண்மையானது அதன் மனம் கஸ்தூரியை விட வாசமானது அதன் பாத்திரங்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் எண்ணிக்கையை போன்றது அதனை அருந்துபவர் ஒரு போதும் தாகித்தவராக ஆகமாட்டார். நூல் : புகாரி, முஸ்லிம். அப்துல்லாபின் உமர்(ரலி)

அதனுடைய ஓரப் பகுதிகள் மரகதங்களாள் கட்டப்பட்டு இருக்கின்றன அதன் கலவை கஸ்தூரியால் கலக்கப்பட்டுள்ளது. அதன் சுவை தேனை விட சுவையானது. நூல் : முஸ்லிம். அபூஹுரைரா(ரலி)

மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கியவர்கள் (பித்அத்) செய்தவர்கள் இதில் தண்ணீர் குடிப்பதை விட்டும் விரட்டப்படுவார்கள். நூல் : முஸ்லிம் . அபூஹுரைரா(ரலி)

ஷஃபாஅத் – பரிந்துரை- சிபாரிசு

1. ஆதம் நபி(அலை) அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாறுசெய்ததின் காரணமாக சிபாரிசு செய்யமாட்டார்கள். நூஹ்(அலை) தவறாக துவா செய்ததால் (தன்மகனுக்கு). இப்றாகீம்(அலை) பொய்சொல்லியதால் (நான் நோயாளி, சிலைகளை உடைத்தது (பெரிய சிலை), பயணத்தின் போது தன் மனைவியை தன் சகோதரி என்று கூறினார்கள்.

மூஸா(அலை) கொலை குற்றத்திற்காக (ஒருவரை ஒரு குத்து விட அவர் இறந்துவிடுதல்). ஈஸா(அலை). காரணம் சொல்லப்படவில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சிபாரிசு மூன்று முறை. நூல் : புகாரி. முஸ்லிம்

திருக்குர்ஆனில் நிரந்தர நரகம் என்று சொல்லப்பட்டவர்களைத் தவிர அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். நூல் : புகாரி, முஸ்லிம். அனஸ்(ரலி)

2. சிபாரிசு செய்வதில் அடுத்தது குர்ஆன். நூல் : புகாரி . முஸ்லிம் அனஸ்(ரலி)

3. சிறுவர்கள் (குழந்தை இறந்து பெற்றோர்கள் பொறுமையாக இருப்பவர்களுக்காக அந்த குழந்தைகள்)

4. அமல்கள் (குறிப்பிட்ட அமல்கள்)

5. குர்பானியின் பிராணிகள்.

6. சூரா பக்ரா, ஆலஇம்ரான்.

7. அல்லாஹ் நாடுபவர்கள். நாடுபவைகள்.

இறுதியாக சொர்க்கம் செல்லுபவர்கள்.

கரிகட்டையாக வெளியேற்றப்படுதல் – ஜீவ நதி(நஹ்ருல் ஹயாத்) யில் போட்டு எடுத்தல் பிறகு உடல் வெண்மையாக மாறுதல்.

சிறிய பாவங்கள் விசாரிக்கப்படுதல் தீமைகளை நன்மைகளாக மாற்றுதல் உடனே பெரும் பாவங்கள் செய்தேனே என்று சொல்லுதல். அபுதர் (ரலி). முஸ்லிம்.

9. முஃமின்களுக்கு சொர்க்கம் காபிர்களுக்கு நரகமும் கிடைக்கும் என நம்புவது.

சொர்க்கம் நரகத்தின் பேச்சு வார்த்தைகள்.

நரகம்:  நான் பெருமை அடிப்பவர்கள் அடக்கி ஆள்பவர்களையும் வாரிசாக்கி கொள்வேன்.

சொர்க்கம்:  மனிதர்களில் மிக பலகீனமானவர்களை நான் நுழைவிப்பேன்.

அல்லாஹ் கூறுகிறான் . சொர்க்கத்தைப் பார்த்து என் அடியார்களில் நான் அருள் செய்தவர்களை உனக்காக அனுப்பிவைப்பேன்.

நரகைப் பார்த்து சொல்வான் . என்னுடைய அடியார்களில் நான் நாடியவர்களை தண்டிப்பதற்காக உன்னிடம் அனுப்புவேன்.

ஆனால் இருவரையும் நிறைத்துவிடுவேன். நரகம் இறைவனின் பாதத்தால் மிதிக்கப்பட்ட பிறகே நிரப்பப்படும். சொர்க்கத்திற்கென புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான். நூல் : புகாரி, முஸ்லிம் . அபூஹுரைரா (ரலி)

சொர்க்கம்:

என்னுடைய நல்லடியார்களுக்காக எந்த கண்களும் பார்த்திராத எந்த செவியும் கேட்டிராத மனித உள்ளங்கள் நினைத்துக் கூட பார்த்திராததை (சொர்க்கத்தை) நான் தயார் செய்து வைத்து இருக்கிறேன். விரும்பினால் இந்த வசனத்தைப் படித்துக் கொள்ளுங்கள் (சூரா ஸஜ்தாவில் 17) என்று அல்லாஹ் கூறுகிறான். நூல் : புகாரி . முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி)

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் கூட்டத்தினர்கள் முழுநிலவைப் போல் பிரகாசிப்பார்கள். அதன் பிறகு நுழையும் கூட்டத்தினர் வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்று மின்னுவார்கள். இவர்களின் உள்ளங்கள் ஒரே உள்ளமாக இருக்கும் (கருத்து வேறுபாடு) கோபம் கொள்ளமாட்டார்கள்) அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஹுர்வீன் இருந்து இரண்டு கொடுக்கப்படுவார்கள். அவர்களின் உட்பகுதி வெளியே இருந்து பார்த்தால் தெரியும். காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து கொண்டு இருப்பார்கள். நோய் அவர்களுக்கு வராது மலம் ஜலம் சளி போன்றவைகள் இருக்காது. அவர்களுக்கு வெள்ளி தங்கம் பாத்திரங்களாகவே இருக்கும். அவர்களுடைய சீப்பு தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கும். அவர்களுக்கு சந்தன புகையிடப்படும். அவர்களின் வேர்வை கஸ்தூரியாக வெளிப்படும். அனைவர்களும் அவர்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் உருவத்தை போல் இருப்பார்கள். அவர்களின் உயரம் 60 அடி இருக்கும். நூல் : புகாரி . முஸ்லிம் : அபூஹுரைரா(ரலி)

பறவையின் உள்ளங்களைப் போன்று (இருப்பவர்கள்) சொர்க்கத்தில் நுழைபவர்களின் உள்ளங்கள் இருக்கும். (உள்ளங்கள் மிருதுவாக இருக்கும், பறவையைப் போன்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இருப்பார்கள்) நூல் : முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி)

சொர்க்கவாசிகளுக்கு நிராசை அடையாத அருள் கிடைத்துக்கொண்டு இருக்கும் அவர்களின் உடைகள் மக்கி போகாது. வாலிபம் நீங்காது. நூல் : முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி)

சொர்க்கத்தில் கடைசி படித்தரத்தில் இருப்பவரின் நிலை அவரைப் பார்த்து நீ ஆசைப்படு எனக் அல்லாஹ் கூறுவான். அதற்கு அவர் ஆசைப்படுவார் (மனதில் நிறைய நினைத்துக் கொள்வார்) அல்லாஹ் கேட்பான் நீ நினைத்து விட்டாயா? ஆம் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ நினைத்ததும் அதனுடன் அது போன்று ஒன்றும் உனக்கு உண்டு (இருமடங்கு) என்று கூறுவான். நூல் : முஸ்லிம் : அபூஹுரைரா (ரலி)

சொர்க்கம் கட்டப்பட்டது எப்படி என்று ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் தங்கம் வெள்ளியிலான கற்கள் கலவை கஸ்தூரியாக இருக்கும். அதனுடைய ஜல்லி வைரம் மற்றும் வைடுரிய கற்கள் . அதன் மண் குங்குமப் பூவாக இருக்கும். – அஹமத் . திர்மிதி

சொர்க்கத்தின் மர இலைகள் தங்கத்தில் இருக்கும். திர்மிதி – அபூஹுரைரா (ரலி)

சொர்க்கத்திற்கு 100 படித்தரங்கள் உள்ளது. அதன் ஒவ்வொரு படித்தரத்தின் இடைவெளி 100 வருடம் நடக்கும் தூரம் இருக்கும். திர்மிதி-அபூஹுரைரா (ரலி)

சொர்க்கம் சம்பந்தமான சில வசனங்கள்;

ஒரே பழம் பல சுவையாக இருக்கும்.

2:25 (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக. சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் ”இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன. இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.

15:45 நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.

15:46 (அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).

15:47 மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.

15:48
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.

16:32 (குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; ”ஸலாமுன் அலைக்கும்’ (”உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.

43:70 நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)

43:72 ”நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.

43:73 ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்).

44:51 பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.

44:52 சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).

44:53 ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீரதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.

44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

44:55 அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.

44:56 முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.

47:12 நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீணி திண்பதைப் போல் திண்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.

47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன் இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

52:17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

52:19 (அவர்களுக்குக் கூறப்படும்;) ”நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”

52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

52:21 எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் – ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.

52:22 இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

52:23 (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.

52:24 அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).

52:25 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

52:26 ”இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.

52:27 ”ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.

52:28 ”நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”

55:46 தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்த அவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.

55:47 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:48 அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.

55:49 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:50 அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.

55:51 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:52 அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.

55:53 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:54 அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் ”இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.

55:55 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

55:57 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:58 அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.

55:59 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:60 நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

55:61 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:62 மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.

55:63 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:64 அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.

55:65 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:66 அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.

55:67 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:68 அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.

55:69 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:70 அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:71 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:72 ஹூர் (என்னும் அக்கன்னியர் அழிகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

55:73 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:74 அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

55:75 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:76 (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

55:77 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

55:78 மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.

69:21 ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் –

69:22 உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

69:23 அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டிதாக) சமீபத்திருக்கும்.

69:24 ”சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).

76:12 மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

76:13 அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

76:14 மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

76:15 (பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

76:16 (அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.

76:17 மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

76:18 ‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

76:19 இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துக்களெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

76:20 அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

76:21 அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

76:22 ”நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.