10.பாங்கு

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 603

அனஸ்(ரலி) அறிவித்தார். (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 604

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) ‘தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?’ என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 605

அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத்காமதிஸ்ஸலாத்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 606

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். மக்களின் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் எனக் கருத்துச சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 607

அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் ‘கத்காமதிஸ்ஸலாத்’ என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 608

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, ‘இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.” என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 609

அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் ‘நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்’ எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 610

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!’ என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 611

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 612

ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார். முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுறபோது ‘அஷ்ஹது அன்ன முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்’ என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 613

யஹ்யா அறிவித்தார். முஅத்தின் ‘ஹய்ய அலஸ்ஸலாத்’ என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் ‘லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்’ என்று சொல்ல வேண்டும். இவ்வாறுதான் உங்கள் நபியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என முஆவியா(ரலி) கூறினார் என எங்கள் சகோதரர்களில் சிலர் அறிவித்துள்ளனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 614

பாங்கு சொல்வதைக் கேட்ட பின், ‘பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’ என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 615

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராம் விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 616

அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார். மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ்ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூடு அவ்வாறு செய்திருக்கிறார்கள்!’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 617

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.”

இதை அறிவிக்கும் இப்னு உமர்(ரலி) ‘அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ்நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 618

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 619

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஸுப்ஹுத் தொழுகை;காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 620

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 621

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று.”

இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள். என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 622

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்””பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 623

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 624

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.” என அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 625

அனஸ்(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுனனத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 626

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஃபஜ்ரு நேரம் வந்து, முஅத்தின் ஃபஜ்ருக்கு பாங்கு சொன்னதற்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக அவர்கள் எழுந்து சுருக்கமாக இரணடு ரக்அத்துகள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 627

அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். “ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 628

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 629

அபூ தர்(ரலி) அறிவித்தார்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தோம். (லுஹர் தொழுகைக்கு) முஅத்தின் பாங்கு சொல்ல ஆயத்தமானபோது ‘கொஞ்சம் பொறு” என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து முஅத்தின் பாங்கு சொல்லத் தயாரான போதும் மலைக் குன்றுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாகும் வரை ‘(பாங்கு சொல்வதைப்) பிற்படுத்துங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் முஅத்தினிடம் கூறிவிட்டு, ‘நிச்சயமாக இந்தக் கடும் வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 630

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 631

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 632

நாஃபிவு அறிவித்தார். மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள். மேலும் ‘பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்:

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 633

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ என்ற இடத்தில் இருந்தபோது அங்கு வந்த பிலால்(ரலி) தொழுகை நேரம் (வந்துவிட்டது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். பின்னர் பிலால் ஒரு கைத்தடியை எடுத்து வந்து அதை நபி(ஸல்) அவர்கள் முன் நாட்டிவிட்டுத் தொழுகைக்காக இகாமத் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 634

அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். பிலால்(ரலி) பாங்கு சொல்லும்போது (பாங்கை நீட்டிச் சொல்வதற்காக) தம் வாயை அங்கும் இங்குமாக அசைப்பதைப் பார்த்தேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 635

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் ‘உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)” என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ‘(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்’ என்று பதில் கூறினர். ‘அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 636

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 637

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம்.” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 638

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம். அமைதியைக் கடைபிடியுங்கள்.” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 639

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இகாமத் சொல்லப்பட்டு, வரிசைகள் சரி செய்யப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வந்தார்கள். அவர்களின் இடத்தில் நின்றதும் அவர்கள் தக்பீர் சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் குளித்துவிட்டுத் தலையில் நீர் சொல்ல எங்களிடம் வரும் வரை நாங்கள் அப்படியே நின்றிருந்தோம்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 640

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தங்கள் வரிசைகளைச் சரி செய்தனர். நபி(ஸல்) அவர்கள் வந்து முன்னே நின்றார்கள். அவர்களின் மீது குளிப்புக் கடமையாகி இருந்தால், ‘உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்” என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். பின்னர் தலையிலிருந்து நீர் சொட்ட வந்து எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 641

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். கந்தக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் (அஸர்) தொழவில்லை’ என்றார்கள். நோன்பு வைத்திருந்தவர்கள் நோன்பு துறந்த பின் இது நடந்தது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் தொழவில்லை” என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ‘புத்ஹான்’ என்ற இடத்திற்குச் சென்றார்கள். உளூச் செய்து அஸர் தொழுதார்கள். அதன் பிறகு மஃரிபு தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 642

அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கிவிட்டனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 643

ஹுமைத் அறிவித்தார். நான் தாபித் அல் புனானி இடம் தொழுகைக்கு இகாமத் சொன்ன பின்பேசக் கூடியவரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் ஒருவர் வந்து நபி(ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர்கள் தொழுகைக்குத் தாமதமாக வந்தார்கள்’ என்று அனஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸைக் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 644

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 645

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 646

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”  “தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.” என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 647

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 648

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.”

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது” (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 649

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 650

உம்மு தர்தா(ரலி) அறிவித்தார.  அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 651

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 652

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 653

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள். பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராம் விடுவார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 654

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 655

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ‘ஸலமாவின் மக்களே! காலடிகளை அதிகம் வைப்பதன் மூலம் நன்மையை நீங்கள் நாட வேண்டாமா?’  என அனஸ்(ரலி) அறிவித்தார்.

“அவர்கள் செய்த செயல்களையும் அவர்களின் (விட்டுச் சென்ற) அடையாளங்களையும் நாம் எழுதுவோம்” (திருக்குர்ஆன் 36:12) என அல்லாஹ் குறிப்பிடுவது காலடிகளைத்தான் என முஜாஹித் கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 656

அனஸ்(ரலி) அறிவித்தார். பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். ‘நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 657

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 658

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழுகை நேரம் வந்ததும் நீங்கள் பாங்கு, இகாமத் சொல்லுங்கள். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்.” என மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 659

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 660

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 661

ஹுமைத் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆம்! ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் நடுப்பகுதி வரை தாமதப் படுத்தினார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர் எங்கள் பக்கம் வந்து ‘மக்கள் தொழுதுவிட்டுத் தூங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர் பார்த்து இருக்கும் போதெல்லாம் தொழுகையல் இருந்தவர்களாகவே கருதப்படுவீர்கள்’ எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் மோதிரம் மின்னியதை நான் இப்பொழுது பார்ப்பதுபோல் இருக்கிறது’ என்று அனஸ்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 662

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 663

அப்துல்லாஹ் இப்னுமாலிக்(ரலி) அறிவித்தார். இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிரைச் சூழ்ந்தனர். ‘ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா?’ என்று அம்மனிரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 664

அஸ்வத் கூறினார்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாள்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்கரிடம் சொல்லுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் மென்மையான உள்ளமுடையவர்; உங்களுடைய இடத்தல் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது’ என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி(ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது, ‘நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் சொல்லுங்கள்!” என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்தபோது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை பார்த்தேன். நபி(ஸல்) அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையினால், ‘உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூ பக்ர்(ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூ பக்ரும் அபூ பக்ருடைய தொழுகையைப் பின்பற்றி மக்களும் தொழுதார்களா? என்று அஃமஷ் இடம் கேட்கப் பட்டபோது ‘ஆம்’ எனத் தம் தலையை அசைத்துப் பதில் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் வந்து அபூ பக்ர்(ரலி) உடைய இடப்பக்கமாக அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நின்று தொழுதார்கள் எனக் காணப்படுகிறது.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 665

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாம் அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, ‘ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை’ என உபைதுல்லாஹ் பதிலளித்தார். ‘அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 666

நாஃபிவு கூறினார்: குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றார்கள். ‘குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 667

மஹ்மூத் இப்னு ரபீஃ கூறினார்: பார்வையற்ற இத்பான்பின் மாலிக் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது! நானோ பார்வையற்றவன். எனவே நீங்கள் என் வீட்டில் வந்து தொழுங்கள். அவ்விடத்தை நான் தொழுமிடமாக்கிக் கொள்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்று ‘நான் எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். அவர் வீட்டில் ஓர் இடத்தைக் காட்டினார். அவ்விடத்தை நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 668

அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூறினார்: மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்கமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்’ என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.

‘(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 669

அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு நாள் மழை பெய்து, அதனால் பள்ளி வாசலின் முகடு ஒழுக ஆரம்பித்தது. பேரீச்ச மட்டையினால் பள்ளி வாசல் முகடு வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூத செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 670

அனஸ்(ரலி) அறிவித்தார். அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், ‘என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை’ எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ‘நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு ‘அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 671

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 672

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இரவு நேர உணவு தயாராம் விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்.” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 673

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவதுவரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.) என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னுஉமர்(ரலி), உணவுவைக்கப் பட்டுத் தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்படுமானால் உணவு அருந்தி முடிவது வரை தொழுகைக்கு வர மாட்டார்கள். அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் ஓதுவதைச் செவியுறுவார்கள். என நாஃபிவு கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 674

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப்பட்டு எழுந்து விட வேண்டாம்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 675

அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொடைக் கறியை வெட்டித் துண்டாக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் கத்தியை எறிந்துவிட்டு எழுந்து உளூச் செய்யாமல் தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 676

அஸ்வத் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்’ என ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 677

அபூ கிலாபா கூறினார்: எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து ‘இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்” என்று கூறினார்கள்.

நான் அபூ கிலாபாவிடம் ‘நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்’ என்று கேட்டேன். ‘(அதற்கு அம்ர் இப்னு ஸலாமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று தொழுதார்கள்’ எனக் கூறினார்கள். அந்த மனிதர் வயதானவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜுதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என்று அய்யூப் அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 678

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்கள். அப்போது ஆயிஷா(ரலி) ‘அவர் இளகிய மனதுடையவர். நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அவரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆயிஷா(ரலி) தாம் கூறியதைத் திரும்பவும் கூறினார்கள். ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ பக்ரிடம் ஒருவர் வந்து (சொன்னார்). நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது அபூ பக்ர்(ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 679

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும், ‘அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி)விடமும் கூறினேன்.

அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் ‘உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 680

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காம்தம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூ பக்ர்(ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 681

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மூன்று நாள்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் அபூ பக்ர்(ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்தபோது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பார்த்துத் தொழுகை நடத்துமாறு தங்கள் கையினால் சைகை செய்து, திரையைப் போட்டு (விட்டு உள்ளே சென்று)விட்டார்கள். பின்னர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 682

அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமானபோது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர் இளகிய உள்ளம் படைத்தவர்; அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்து விடும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆயிஷா(ரலி) தம் பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் ‘அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள். நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்’ என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 683

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபுபக்ர்(ரலி) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களை அபூ பக்ர்(ரலி) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். ‘அப்படியே இருங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களையும் மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 684

ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாயிதி(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்தபோது, அங்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அப்போது முஅத்தின்,அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘நான் இகாமத் சொல்லட்டுமா! நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) ‘ஆம்!’ என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூ பக்ர்(ரலி) தம் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி)யைப் பார்த்து, ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’ என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி(ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுத்தினார்கள். பின்னர் அபூ பக்ர்(ரலி), பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும், ‘அபூ பக்ரே! நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பின்னரும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின் வாங்கி விட்டீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு, ‘அபூ குஹாபாவின் மகனான அபூ பக்ர் அல்லாஹ்வின் தூதரின் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை’ என அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, ‘நீங்கள் எதற்காக அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்கு அவரின் தொழுகையில் சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பிஹ் சொல்லும்போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்குத் தான்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 685

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் ஏறத்தாழ இருபது நாள்கள் தங்கியிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்ததால் ‘நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்!” என்றும் இன்னின்ன தொழுகையை இன்னின்ன நேரத்தில் தொழுங்கள் என்றும் ‘தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லி, மூத்தவர் இமாமத் செய்ய வேண்டும்” என்றும் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 686

இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என் வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி கொடுத்தேன். ‘உம் வீட்டில் எங்கே நான் தொழ வேண்டுமென நீர் விரும்புகிறீர்” என்றார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்குக் காட்டினேன். அவர்கள் நின்றதும் நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தோம். அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 687

உபைதுல்லாஹ் கூறினார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று ‘நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்! நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.

அப்போது ‘பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது ‘பாத்திரததில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். இல்i; இறைத்தூதர் அவர்களே! அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்’ என்றார்கள். அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், ‘உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்’ என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாள்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது ‘பின் வாங்க வேண்டாம்’ என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், ‘என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த்துங்கள்’ எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள்.

நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா(ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா? என்று கேட்டேன். ‘அதற்கு சொல்லுங்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், ‘அப்பாஸ்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா(ரலி) சொன்னார்களா?’ என்று கேட்டார்கள். இல்லை என்றேன். ‘அவர் தாம் அலீ(ரலி)’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 688

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்நது தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய்தார்கள் அவர்கள் தொழுது முடித்த பின்னர் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்” எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 689

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடி பட்டது. எனவே அவர்கள் ஒரு தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவாறுதொழுதோம் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப் படுவதற்ககாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நின்று தொழுதால் நின்று நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள். அவர் ஸமி அல்லாஹ் லிமன் ஹமீதா என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று செல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்தது தொழுதால் நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து எதாழுங்கள். என்று கூறினார்கள். இமாம் உட்கார்ந்து எதொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறியது நபி(ஸல்) அவர்களுக்கு விபத்தின்போது ஏற்பட்ட முந்தைய நோயின்போது ஆகும். மரண நோயின்போது நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதபோது அவர்களுக்கு பின்னால் மக்கள் நின்று தொழுதார்கள். அவர்களை உட்காருமாறு நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. கடைசியாக உள்ளஉள்ளதைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக உள்ளது நபி(ஸல்) அவர்களின் இச்செயல்தான் என ஹமைதி குறிப்பிடுகிறார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 690

பராவு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து ஸுஜூதுக்குச் சென்று தலையைப் பூமியில் வைப்பதுவரை எங்களில் யாரும் ஸுஜூதுக்காகத் தம் முதுகை வளைக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுக்குச் சென்ற பின்புதான் நாங்கள் ஸுஜூது செய்வோம்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 691

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 692

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதியவராக இருந்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 693

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 694

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 695

உபைதுல்லா இப்னு அதீ கூறினார்: உஸ்மான்(ரலி) முற்றுகையிடப் பட்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்று ‘நீங்கள் மக்களக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர். இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்’ என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோத அத்தவறுகளைவிட்டும் நீ ஒதுங்கிக் கொள்’ என உஸ்மான்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 696

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘பேடியை (ஆணும் பெண்ணுமற்றவர்) பின்பற்றி அவசியமேற்பட்டால் தவிர தொழக் கூடாது’ என ஸுஹ்ரி கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 697

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என் சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் தங்கியிருந்த இரவில் நபி(ஸல) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்தார்கள். நான் சென்று அவர்களின் இடப்புறம் நின்றேன். என்னைத் தம் வலப்புறமாக்கினார்கள். ஐந்து ரக்அத்கள் தொழுது, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (ஸுபுஹ்) தொழுகைக்குச் சென்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 698

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (என்னுடைய சிறிய தாயார்) மைமூனா(ரலி)வுடைய வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருந்து இரவில் நான் தூங்கினேன். அவர்கள் உளூச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். நான் சென்று அவர்களின் இடப்பக்கமாக நின்றேன். அப்போது அவர்கள் என்னைப் பிடித்து அவர்களின் வலப்பக்கமாக நிறுத்தினார்கள். பின்னர் பதின்மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அவர்கள் குறட்டை வெளியாகும் அளவிற்குத் தூங்கிவிட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் குறட்டை விடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். பின்னர் முஅத்தின் வந்தபோது பள்ளிக்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். அவர்கள் உளூச் செய்ய வில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 699

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் (மைமூனா(ரலி)) வீட்டில் நான் இரவு தங்கினேன். நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தொழலானார்கள். அவர்களோடு நானும் தொழுவதற்காக அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்போது (தொழுகையில் நின்றவாறே) என் தலையைப் பிடித்து அவர்களின் வலப்பக்கம் நிறுத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 700

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 701

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நடத்தும்போது ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர்(தொழுகையை)விட்டும் விலகிச் சென்றார். (தொழுது முடித்ததும்) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவரைக் கண்டித்தார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ‘(நீரென்ன) குழப்பவாதியா?’ என்று மும்முறை நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)ஜ நோக்கிக் கூறினார்கள். மேலும், நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அம்ர் ‘அந்த இரண்டு அத்தியாயங்களை எவையென ஜாபிர்(ரலி) குறிப்பிட்டார்கள். அது எனக்கு நினைவில் இல்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 702

அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்)! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். ‘(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள்” என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 703

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களிலுள்ளனர். தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 704

அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர்! இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 705

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன் தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) ‘பகரா’ அல்லது ‘நிஸா’ அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார்.

இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்துபவரா?’ என்று மும்முறை கேட்டார்கள். ‘ஸப்பிஹிஸ்மரப்பி’, வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி இதாயக்ஷா’ ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா? நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 706

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 707

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 708

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களை விடத்தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 709

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 710

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்’. என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 711

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 712

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். ‘அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை ‘நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்” என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவ்hகளாக (ப்பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 713

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அறிவித்தார். ‘மக்களுக்காகத் தொழுகை நடத்தும்படி அபூ பக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, ‘அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனை கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும், அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி) அவர்களிடமும் கூறினேன். அவர், ‘நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையைத் துவக்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், தம் நோய் இலேசாகுவதை உணர்ந்து தரையில் கால்கள் இழுபட இரண்டு மனிதர்களுக்கு இடையே தொங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கிச் சைகை செய்துவிட்டு அபூ பக்ரின் இடப் புறம் அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். மக்கள் அபூ பக்ர்(ரலி)யைப் பின்பற்றித் தொழுதனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 714

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைந்துவிட்டனவா? அல்லது நீங்கள் மறந்த விட்டீர்களா? என்று துல்யதைன் கேட்டார். ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், ‘ஆம்’ என்றனர். உடன், மற்றும் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறி முன்பு செய்தது போன்று, அல்லது அதை விடவும் நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 715

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்தாகத் தொழுகை நடத்தினார்கள். ‘இரண்டு ரக்அத்கள் தானே தொழுகை நடத்தினீர்கள்?’ என்று கூறப்பட்டது. பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தியப் பின்பு ஸலாம் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 716

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, ‘அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்’ என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும், அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன்.

அவர்களிடம் கூறியபோது, ‘நிறுத்து, நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் ‘உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 717

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.” என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 718

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காணுகிறேன்.” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 719

அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, ‘வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 720

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மூழ்கி இறந்தவர்களும் காலராவில் இறந்தவர்களும் வயிற்றோட்டத்தில் இறந்தவர்களும் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்களும் ஷஹீத்களாவர்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 721

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 722

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பின்பற்றப் படுவதற்காகவே இமாம் ஏற்படுத்துப் பட்டுள்ளார். அவருக்கு முரண் படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்! அவர் ‘ஸமிஅல் லாஹுலிமன் ஹமிதா’ என்று கூறும்போது நீங்கள் ‘ரப்பனாலகல்ஹம்து’ எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்’. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 723

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும்.” என அனஸ்ழூழூ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 724

பஷீர் இப்னு யஸார் கூறினார்: அனஸ்(ரலி) மதீனா வந்தபோது, ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்துள்ள நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் காண்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. ‘நீங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை’ என்று அனஸ்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 725

அனஸ்(ரலி) கூறினார்: ‘உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 726

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது அவர்கள் என் தலையின் பின்புறத்தைப் பிடித்துத் தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். தொழுததும் உறங்கிவிட்டார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து உளூச் செய்யாமலே தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 727

அனஸ்(ரலி) அறிவித்தார். எங்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்முஸுலைம்(ரலி) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 728

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக என்னுடைய கையைப் பிடித்து தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 729

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களம் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்க ள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ‘இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 730

ஆயிஷா(ரலி) கூறினார்; நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 732

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரையில் ஏறிச் சென்றபோது அவர்களின் வலப்பக்கம் பிசம்க் கொண்டது. அன்று ஏதோ ஒரு தொழுகையை உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதோம். ஸலாம் கொடுத்ததும், ‘இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவர் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே, எனவே அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்யும் பொழுது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸஜ்தாச் செய்யுங்கள். அவர் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும்போது ரப்பனா வலக் கல்ஹம்து எனக் கூறுங்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 733

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் சுளுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் உட்கார்ந்து தொழுதோம். தொழுது முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘இமாம் ஏற்படுத்தப் படுவது பின்பற்றப் படுவதற்கே. எனவே தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனக் கூறும்போது ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 734

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “இமாம் ஏற்படுத்தப் பட்டிருப்பது பின்பற்றப் படுவதற்கே. எனவே அவர் தக்பீர் கூறும்போது நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹiதா எனக் கூறும்போது நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தும்போது நீங்களும் அவரோடு சேர்ந்து உட்கார்நது தொழுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 735

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் தோள்களுக்கு நேராகத் தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 736

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தம் தோள் புஜங்களுக்கு நேராக இரண்டு கைகளையும் உயர்த்துவதை பார்த்திருக்கிறேன். ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறேன். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும இவ்வாறு செய்வார்கள். ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்றும் அப்போது கூறுவார்கள். ஸஜ்தாவின்போது இவ்வாறு செய்யமாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 737

அபூ கிலாஃபா கூறினார்: மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) தொழும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தம் கைகளை உயர்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தோள் புஜம் வரை கையை உயர்த்தியதாக அபூ ஹுமைத்(ரலி) தம் தோழர்களிடம் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 738

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் தக்பீர் கூறினார்கள். தக்பீர் கூறும் போதே தம் கைகளைத் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்தினார்கள். ருகூவுக்குத் தக்பீர் கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்றும் கூறினார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போதும் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 739

நாபிஃவு கூறினார்: இப்னு உமர்(ரலி) தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாம் ரக்அத் முடித்து எழும்போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 740

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஹாஸிம் ‘இவ்வாறு ஏவியது நபி(ஸல்) அவர்கள் என்று கருதுகிறேன்’ என்றார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 741

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ம்ப்லாத் திசையில் மட்டும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மேல் ஆணையாக உங்களின் ருகூவும் பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்குப் பின் புறமாகவும் நான் உங்களைப் பார்க்கிறேன்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 742

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக – அல்லது என் முதுகுக்குப் பின் நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும்உங்களைப் பார்க்கிறேன்.” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 743

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 744

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். ‘இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் ன் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப் படுவது போல் என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன்” என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 745

அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் ருகூவை நீட்டினார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நிற்கும் போதும் நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவு செய்தார்கள். அதையும் நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்பு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவை நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்த போதும் நீட்டினார்கள். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு, ‘சுவர்க்கம் என் அருகில் தென்பட்டது; எனக்குச் சக்தி இருந்திருக்குமானால் அதன் குலைகளில் ஒன்றை உங்களிடம் தந்திருப்பேன். ‘இறைவா! நானும் இவர்களுடனே இருந்து விடுவேனோ?’ என்று நான் எண்ணும் அளவுக்கு நரகம் என் அருகில் நெருங்கியது. அந்த நரகத்தில் ஒரு பெண்ணைப் பூனை ஒன்று பிராண்டிக் கொண்டிருந்தது. ‘இவள் இந்த நிலையை அடைந்திடக் காரணம் என்ன?’ என்று கேட்டேன். ‘இவள் இந்தப் பூனையைக் கட்டி வைத்துவிட்டாள். தானும் அதற்கு உணவளிக்கவில்லை; பூமியிலுள்ள சிறு உயிரினங்களை உண்ணட்டும் என்று அதை இவள் அவிழ்த்து விடவுமில்லை; அப்பூனை பசியால் இறந்துவிட்டது’ என்று (வானவர்கள்) கூறினார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 746

அபு மஃமர் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 747

பராவு(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது, ‘அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸஜ்தாவுக்குச் சென்றதை நாங்கள் பார்க்கும் வரை நின்று கொண்டிருப்போம்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 748

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீர்களே?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். ‘எனக்குச் சுவர்க்கம் எடுத்துக் காட்டப் பட்டது. அதிலிருந்து ஒரு குலையைப் பிடித்தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 749

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு மேடையில் ஏறினார்கள். அப்போது கிப்லாத் திசையில் தம் கைகளால் சைகை செய்தார்கள். ‘நான் உங்களுக்குத் தொழுகை நடத்தியபோது இந்தச் சுவற்றில் சுவர்க்கத்தையும் நரகத்தையும் உருவமாக கண்டேன். நன்மை, தீமைகளின் விளைவுகளை இன்று கண்டது போல் என்றுமே நான் கண்டதில்லை” என்று மும்முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 750

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்.” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 751

ஆயிஷா(ரலி) அறிவித்தார். தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 752

ஆயிஷா(ரலி) அறிவித்தார். கோடுகள் போடப் பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ‘இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பிவிட்டன. இதை அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு மற்றோர் ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 753

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களை கிப்லாத் திசையிலுள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டிவிட்டு மக்களை நோக்கி, ‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 754

அனஸ்(ரலி) கூறினார் (அபூ பக்ர்(ரலி) இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது மக்களுக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் புன்னதை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்ர்(ரலி) பின்னால் நகர்ந்து வரிசையில் சேர்ந்து கொள்ள முற்பட்டார்கள். தங்கள் தொழுகைகளே குழம்பிப் போகுமோ என்று முஸ்லிம்கள் எண்ணலானார்கள். உங்கள் தொழுகையைப் பூரணமாக்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்துவிட்டுத் திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியில் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 755

ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். (கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து ‘அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப் படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்’ என்று பதிலளித்தார்கள். ‘உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே’ என்று உமர்(ரலி) கூறினார்.

அதன்பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். ‘பன}அபஸ்’ கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, ‘நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தம்து படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை; (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை; தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை’ என்று புகார் கூறினார்.

இதைக் கேட்ட ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்’ என்று கூறிவிட்டு, ‘இறைவா! உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக! அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் ‘சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாம் விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது’ எனக் கூறக் கூடியவராம்விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் ‘அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமை யினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 756

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.” இதை உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 757

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

“நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 758

ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். ஸஃது(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள தொழுதது போல் நான் அவர்களுக்கு மஃரிபு, இஷாத் தொழுகைகளை நடத்தினேன். அதில் நான் எந்தக் குறைவும் செய்யவில்லை. முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் சுருக்கமாகவும் ஓதுவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) ‘நாமும் உம்மைப் பற்ற அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 759

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சயமங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமாறும் ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 760

அபூ மஃமர் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 761

அபூ மஃமர் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 762

ஆபூ கதாதா(ரலி) அறிவித்தார். லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 763

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் ‘வல்முர்ஸலாதி உர்பன்’ என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி), ‘அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்திவிட்டாய்’ என்று கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 764

மர்வான் இப்னு அல்ஹகம் கூறினார்: ‘மக்ரிப் தொழுகையில் சிறிய அத்தியாயங்களை நீங்கள் ஓதுகிறீர்களா? நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய அத்தியாயங்களில் மிகவும் பெரிய அத்தியாயத்தை ஓத செவியுற்றுள்ளேன்’ என என்னிடம் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 765

ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 766

அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கும் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 767

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் ‘வத்தீனி வஸ்ஸைத் தூனி’ என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 768

அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கம் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 769

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத செவியுற்றுள்ளேன். அவர்களை விட அழகிய குரலில் வேறெவரும் ஓத நான் செவியுற்றதில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 770

ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். ‘தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் மக்கள் உம்மைப் பற்றிப் புகார் செய்துள்ளனர்’ என்று உமர்(ரலி) ஸஃது(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஸஃது(ரலி) ‘முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாகவும் ஓதுவேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையை அப்படியே பின்பற்றுவதில் நான் எந்தக் குறையும் செய்யவில்லை’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) ‘நாமும் உம்மைப் பற்றி அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 771

ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்: நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘கடமையான தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடு வானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்’ என்றார்கள். மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். ‘கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை நபி(ஸல்) அவர்கள் விரும்புபவர்களாக இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்’ என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 772

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எல்லாத் தொழுகைகளிலும் ஓதப் பட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்கக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி(ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம். ‘அல்ஹம்து’ அத்தியாயத்தை மட்டும் ஓதினால் அது போதுமாகும். அதை விட அதிகமாக ஓதினால் அது சிறந்ததாகும்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 773

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன’ என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். ‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் ‘திஹாமா’ எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். ‘உக்காழ்’ சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, ‘வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்’ என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, ‘எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணை வைக்கவே மட்டோம்’ என்று கூறினர். உடனே அல்லாஹ் ‘ஜின்’ எனும் அத்தியாயத்தை இறக்கியருளினான். நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அத்தியாயத்தல் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல.)

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 774

இப்னு அப்பாஸ்ழூழூ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்ப (சில தொழுகைகளில்) சப்தமின்றி ஓதினார்கள். (ஏனெனில்) ‘உம்முடைய இறைவன் மறப்பவனல்ல” (திருக்குர்ஆன் 19:64) என்றும் ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு” (திருக்குர்ஆன் 33:21) என்றும் அல்லாஹ் கூறினான்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 9774

அனஸ்(ரலி) அறிவித்தார். அன்ஸார்களில் ஒருவர் ‘குபா’ எனும் பள்ளியில் இமாமத் செய்பவராக இருந்தார்கள். அவர் தொழுகையில் எந்த அத்தியாயத்தை ஓதுவதற்கு முன்பும் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் அத்தியாயத்தையும் ஓதி விட்டே மற்ற அத்தியாயத்தை ஓதுபராக இருந்தார். ஒவ்வொரு ரக்அத்திலும் இப்படியே செய்பவராக இருந்தார். நீர் இந்த (குல்ஹுவல்லாஹு) அத்தியாயத்தை ஓதிவிட்டு அது போதாதெனக் கருதி மற்றோர் அத்தியயத்தையும் ஓதுகின்றீர்! இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதும்! அல்லது இதைவிட்டுவிட்டு வேறொரு அத்தியாயத்தை ஓதும்!’ என்று மக்கள் அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் இதைவிட்டு விட மாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு ஓதியே உங்களுக்கு இமாமத் செய்கிறேன். நீங்கள் விரும்பாவிட்டால் உங்களுக்கு இமாமத் செய்வதைவிட்டு விடுகிறேன்’ என்றார்.

அம்மக்கள் அவரைச் சிறந்தவராகக் கருதியதால் வேறெவரும் தங்களுக்கு இமாமத் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. (இந்நிலையில்) நபி(ஸல்) அவர்கள், அம்மக்களிடம் (ஒரு முறை வந்தபோது, மக்கள்) இச்செய்தியைத் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இன்னாரே! உம்முடைய தோழர்கள் உம்மை வலியுறுத்துவது போல் நீர் செய்வதற்கு என்ன தடை? ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தையே நீர் அவசியமாக்கியது ஏன்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் ‘நான் அந்த அத்தியாயத்தை விரும்புகிறேன்’ என்றார். ‘நீர் அந்த அத்தியாயத்தை விரும்புவது உம்மைச் சுவனத்தில் சேர்க்கும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 775

அபூ வாயில்(ரலி) அறிவித்தார். ஒருவர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்’ என்றார். (முஃபஸ்ஸல் என்பது ‘காஃப்’ அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா? என்று அவர் கேள்வி கேட்டார்.)

‘கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா? நபி(ஸல்) அவர்கள் ‘முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்’ என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 776

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்களிரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஒதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 777

அபூ மஃமர் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர். ‘இதை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்?’ என்று திரும்பவும் நாங்கள் கேட்டோம். அதற்கு கப்பாப்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்களின் தாடியின் அசைவு மூலம் அறிந்து கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 778

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுரத்துல் ஃபாத்திஹாவுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தனர். சில நேரங்களில் (சில வசனங்களை) எங்களுக்குக் கேட்கும் படி ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தை விட) முதலாவது ரக்அத்தை நீளமாக்குவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 779

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையில் முதலாவது ரக்அத்தை நீளமாக்கி இரண்டாவது ரக்அத்தைச் சுருக்கித் தொழுபவர்களாக இருந்தனர். இதைப் போன்று ஸுபுஹுத் தொழுகையிலும் செய்பவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 780

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். “இமாம் ஆமின் கூறும்போது நீங்களும் ஆமின் கூறுங்கள்! ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அiமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 781

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 782

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “இமாம் ‘கைருல் மக்லூபி அலை ஹிம் வலழ்ழாலீன்’ என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆமின் வானவர்கள் கூறும் ஆமினுன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 783

அபூ பக்கரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 784

முதர்ரிஃப் அறிவித்தார். ‘பஸரா’ நகரில் அலீ(ரலி)யைப் பின்பற்றி இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) தொழுதார்கள். (அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவு படுத்தும் வகையில் தொழுகை நடத்துகிறார்! நபி(ஸல்) அவர்கள் குனியும் போதும் தாழும் போதும் ‘தக்பீர்’ கூறுபவர்களாக இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 785

அபூ ஸலமா அறிவித்தார். குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூ ஹுரைரா(ரலி) தொழுகை நடத்திவிட்டு ‘நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டினேன்’ என்றும் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 786

முதர்ரிஃப் அறிவித்தார். நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலீ(ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலீ(ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும தக்பீர் கூறினார்கள். இரண்டு ரக்அத்தை முடித்து எழும்போதும் தக்பீர் சொன்னார்கள். தொழுகையை முடித்த பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டு ‘இவர் நபி(ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவு படுத்திவிட்டார்’ என்று இம்ரான்(ரலி) குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 787

இக்ரிமா அறிவித்தார். ஒருவர் ‘மகாமு இப்ராஹீம்’ எனுமிடத்தில் தொழுவதைக் கண்டேன். அவர் குனியும் போதும் நிமிரும் போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். இது பற்றி இப்னு அப்பாஸ்ழூழூ(ரலி) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘இது நபி(ஸல்) அவர்கள் தொழுது தொழுகை போல் இல்லையா? தாயற்றுப் போவாய்’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 788

இக்ரிமா அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்ழூழூ(ரலி) அவர்களிடம் வந்து இவர் ஒரு மடையர் என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உன் தாய் உன்னை இழந்து விடட்டும்; அம்மனிதர் நபி(ஸல்) அவர்களின் வழி முறையைச் செயல் படுத்திவிட்டார்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 789

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்ததும்போது ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லகல் ஹம்து’ மற்றோர் அறிவிப்பில் ‘வலகல் ஹம்து’ என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 790

முஸ்அப் இப்னு ஸஃது அறிவித்தார். நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, ‘நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகைள மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்’ என்றார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 791

ஸைத் இப்னு வஹ்பு அறிவித்தார். ருகூவையும் ஸஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்லை. இந்த நிலையில் நீர் மரணித்துவிட்டால் முஹம்மத்(ஸல்) அவர்களின் மார்க்கத்தில் மரணித்தவராக மாட்டீர்’ என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 792

பரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களின் ஸஜ்தாவும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 793

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பவும் நீர் தொழுவீராக? நீர் தொழவே இல்லை” என்றும் கூறினார்கள்.

அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு மூன்று முறை நடந்தது). அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்தியமார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

“நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 794

‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘இறைவா! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!” என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அவிறித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 795

‘நபி(ஸல்) அவர்கள் ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து’ என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறுவார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 796

‘இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 797

அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறியபிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 798

அனஸ்(ரலி) அறிவித்தார். மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 799

ரிஃபாஆ இப்னு ராஃபிவு(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் ‘ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’ என்று கூறினார். தொழுது முடித்ததும் ‘இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?’ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் ‘நான்’ என்றார். ‘முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 800

ஸாபித் அறிவித்தார். அனஸ்(ரலி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 801

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் ருகூவிலும் எழுந்து நிற்கும் நேரமும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப் பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 802

அபூ கிலாபா அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்பதை மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) எங்களுக்குத் தொழுது காட்டினார்கள். இவ்வாறு அவர்கள் செய்து காட்டியது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. அவர்கள் நின்றார்கள். நன்கு நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் மவுனமாக நின்றார்கள்.

பின் நம்முடைய பெரியார் அபூ புரைத் தொழுவது போன்றே மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் தொழுது காட்டினார்கள்.

இந்த அபூ புரைத் தொழும்போது (இரண்டாம்) ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்திச் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டு (இரண்டாம் ரக்அத்துகளாக) எழுக்கூடியவராக இருந்தார் என்று அய்யூப் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 803

அபூ ஸலமாவும் அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மானும் அறிவித்தார். கடமையான தொழுகைகளிலும் அது அல்லாத (உபரித்) தொழுகைகளிலும் ரமளானிலும் ரமளான் அல்லாத நாள்களிலும் ஒவ்வொரு தொழுகையிலும் அபூ ஹுரைரா(ரலி)தக்பீர் சொல்பவர்களாக இருந்தனர். நிற்கும்போது அவர்கள் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூவு செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்ன்h ஸஜ்தாச் செய்வதற்கு முன் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவுக்காகக் குனியும்போது ‘அல்லாஹுஅக்பர்’ என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள்; பின்னர் (இரண்டாம்) ஸஜ்தாச் செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டு எழும்போது தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும் வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள்.

பின்னர் தொழுகையை முடித்தபின் ‘என்னுடைய உயிர் எவன் வசத்திலுள்ளதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதரின் தொழுகையைப் போன்றே உங்களுக்கு நான் தொழுது காட்டுகிறேன். உலகைப் பிரியும் வரை இதுவே நபி(ஸல்) அவர்களின் தொழுகையாக இருந்தது’ என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 804

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். ‘இறைவா! வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ மற்றும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களை நீ காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ கூட்டத்தின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூஸுஃப்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த ‘முளர்’ கூட்டத்தினர் அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 805

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடி பட்டது. அவர்களை நாங்கள் நோய் விசாரிக்கச் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் (அவர்களுக்குப் பின்னால்) உட்கார்ந்தவாறு தொழுதோம். நபி(ஸல்) அவர்கள், தொழுகையை முடித்ததும், ‘இமாம் பின்பற்றப் படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்! அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று சொல்லுங்கள்; அவர் ஸஜ்தாச் செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 806

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து, ‘கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்’ என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.

அப்போது இறைவன் அவர்களை நோக்கி ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான்! அதற்கு அவர்கள் ‘எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்’ என்பார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து ‘நானே உங்களுடைய இறைவன்’ என்பான். அதற்கு அவர்கள் ‘நீயே எங்களின் இறைவன்’ என்பார்கள்.

பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப் படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். ‘இறைவா காப்பாற்று! இறைவா காப்பாற்று!’ என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களும் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.

நரக வாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.

ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்களின் மீது உயிர்த் தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான்.

முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் ‘இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக! அதனுடைய காற்று என்னை வெளுகச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது’ என்பான்.

அதற்கு இறைவன் ‘இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?’ என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் ‘உன் கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்க மாட்டேன்’ என்பான். அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதி மொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான். அவனுடைய முகத்தை நரகத்தைவிட்டும் திருப் விடுவான்.

சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு ‘இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன் ‘முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் ‘இறைவா! உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்’ என்பான். அதற்கு இறைவன் ‘நீ கேட்டதைக் கொடுத்துவிட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா?’ என்று கேட்பான். அம்மனிதன் ‘கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்க மாட்டேன்’ என்பான்.

இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக் கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான். அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான். வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான் அதன்பின்னர் ‘இறைவா! என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக!’ என்பான். ‘ஆதமுடைய மகனே! ஏன் வாக்குமாறுகிறாய்? முன்பு கொடுத்ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி எடுக்கவில்லையா?’ என்று இறைவன் கேட்பான்.

அதற்கு அம்மனிதன் ‘இறைவா! உன்னுடைய படப்பினங்களில் மிகவும் துர்பாக்கிய சாலியாக என்னை ஆக்கி விடாதே!’ என்பான். இம்மனிதன்னுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான். பின்பு சுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான்.

அதன்பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி ‘நீ விரும்பக் கூடியதையெல்லாம் விரும்பு’ என்பான். அம்மனிதன் விரும்பக் கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி) முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு (அவன் கேட்க மறந்ததையெல்லாம்) நினைவு படுத்தி ‘இதை விரும்பு, அதை விரும்பு’ என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில் அவனுடைய ஆசைகளைச் சொல்லி முடித்தவின் ‘நீ கேட்டதும் அது போல் இன்னொரு மடங்கும் உனக்கு உண்டு’ என இறைவன் கூறுவான்” என்றார்கள்.

இச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் அபூ ஸயீத்(ரலி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும்’ என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆட்சேபித்தார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா(ரலி) ‘ஒரு மடங்கு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றார்கள். அதற்கு அபூ ஸயீத்(ரலி) ‘பத்து மடங்கு’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 807

அப்துல்லாஹ் இப்னு மாலிக் இப்னி புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழும்போது (ஸஜ்தாவில்) அவர்களின் அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரண்டு கைகளையும் விரிப்பார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 808

அபூ வாயில் அறிவித்தார். ருகூவையும் ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டார்கள். அம்மனிதர் தொழுது முடித்தபோது அவரை நோக்கி ‘நீ தொழவில்லை’; இந்நிலையில் நீ மரணித்துவிட்டால் நபி வழி அல்லாத வேறு வழியில் நீ மரணித்தவனாவாய்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 809

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 810

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார். “ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நாம் கட்ளையிடப் பட்டோம். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டோம். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 811

பராவு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமி அல்லாஹழூழூ{ லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸுஜுதுக்குச் சென்று) எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தம் முதுகை வளைக்க மாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 812

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார். “நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்.

நெற்றியைக் குறிப்பிடும்போது தம் கையால் மூக்கை அடையாளம் காட்டினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 813

அபூ ஸலமா அறிவித்தார் நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன்.

அப்போத அபூ ஸயீத்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாக் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்) வர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 814

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் காலத்து) மக்கள் சிறிதாக இருந்த தங்களின் கீழாடையைப் பிடரிகளின் மீது கட்டிக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுபவர்களாக இருந்தனர். (ஸஜ்தாவின் போது) ஆண்கள் ஸஜ்தாச் செய்து உட்காரும் வரை நீங்கள் உங்கள் தலையை உயர்த்த வேண்டாம் என்று பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 815

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 816

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் ப்டடுள்ளேன்.” என இப்னு அப்பாஸ்ழூழூ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 817

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும்மஃபிர்லி” (இறைவா! உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! என்னை மன்னித்து விடு) என்று அதிகமதிகம் கூறுவார்கள். (இதாஜாஅ… என்ற அத்தியாயத்தில் கூறப்படும்) குர்ஆனின் கட்டளையை இதன் மூலம் செயல் படுத்துவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 818

அபூ கிலாபா அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியதை உங்களுக்கு நான் செய்து காட்டட்டுமா?’ என்று மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) தம் தோழர்களிடம் கேட்டார்கள். இது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை. (அவர்கள் தொழுது காண்பித்த போது) அவர்க ளநின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தக்பீர் கூறினார்கள். பின்பு தலையை உயர்த்திச் சிறிது நேரம் நின்றார்கள். பின்பு ஸஜ்தாச் செய்து, பின்பு தலையை உயர்த்திச் சிறிது நேரம் இருந்தார்கள். இதோ நம்முடைய பெரியார் அம்ர் இப்னு ஸலமா தொழுவது போன்றே அந்த நபித்தோழர் தொழுது காண்பித்தார்கள்.

அந்தப் பெரியவர் அம்ர் இப்னு ஸலமா தொழுமூபோது மூன்றாம் ரக்அத்திலோ, நான்காம் ரக்அத்திலோ உட்கார்ந்து விடடு எழுபவராக இருந்தார்கள். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை என்னால் காண முடியவில்லை என்று அய்யூப் என்பவர் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 819

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (சில நாள்கள்) தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும் போது) ‘நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும், இன்னின்ன தொழுகைகளை இன்னின்ன நேரத்தில் தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் முதியவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 820

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 821

ஸாபித் அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தியது போல் நான் உங்களுக்குத் தொழுகை நடத்துவதில் எந்த குறையும் வைக்க மாட்டேன்’ என்று அனஸ்(ரலி) கூறினார். அவர்கள், ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுமளவு நிற்பார்கள். மேலும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நினைக்குமளவு அமர்ந்திருப்பார்கள். அனஸ்(ரலி) செய்தது போல் உங்களிடம் நான் காணவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 822

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது.” என அனஸ்(ரலி) அறிவித்தார்

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 823

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 824

அபூ கிலாபா அறிவித்தார். எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து ‘இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்களை எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறிவிட்டு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

நான் அபூ கிலாபாவிடம் அவரின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டேன். அதற்கு அபூ கிலாபா ‘(அம்ர் இப்னு ஸலமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று இருந்தது’ எனக் கூறினார்கள். அந்த முதியவர் தக்பீரைப் பூரணமாகக் கூறுவார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜூதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என அய்யூப் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 825

ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் கூறினார்: எங்களுக்கு அபூ ஸயீத்(ரலி) தொழுகை நடத்தினார்கள். அப்போது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்ததை நான் பார்த்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 826

முதர்ரிப் அறிவித்தார். நானும், இம்ரானும் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களின் பின்னே தொழுதோம். அவர்கள் ஸஜ்தாவின்போது தக்பீர் கூறினார்கள். (ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள்.) இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் இம்ரான்9ருலி) என் கையைப் பிடித்து, ‘நிச்சயமாக இவர் முஹம்மத்(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டியுள்ளார்’ என்றோ ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் தொழுகையை இவர் எனக்கு நினைவு படுத்திவிட்டார்’ என்றோ குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 827

அப்துல்லாஹ் அறிவித்தார். (என்னுடைய தந்தை) இப்னு உமர்(ரலி) தொழுகையில் உட்காரும்போது சம்மணமிட்டு உட்காருவதை பார்த்தேன். சிறு வயதினனாக இருந்த நானும் அவ்வாறே உட்கார்ந்தேன். இதைக் கண்ட இப்னு உமர்(ரலி) ‘தொழுகையில் உட்காரும் முறை என்னவென்றால் உன் வலது காலை நாட்டி வைத்து இடது காலைப் படுக்கை வசமாக வைப்பது தான்’ என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் சம்மணமிட்டு அமர்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) ‘என் கால்கள் என்னைத் தாங்காது’ என்று விடையளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 828

முஹம்மத் இப்னு அம்ர் கூறினார்: நான் சில நபித் தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ(ரலி) ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்ற உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும்போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும்போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலப் புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 829

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது,உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 830

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஓர் இருப்பு கடமையான நிலையில் (இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே) எழுந்துவிட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 831

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள்நபி(ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், வமீ காயீல், அஸ்ஸலாமு அலா ஃபுலான்’ என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, ‘நிச்சயமாக அல்லாஹ்தான் ‘ஸலாம்’ ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழும்போது ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீது அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றும் கூறட்டும்’ எனக் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 832

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். ‘தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 833

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் பாதுகாப்புத் தேடுவதை செவியுற்றுள்ளேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 834

அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒர துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 835

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது ‘அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக’ என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் ‘காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 836

அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூது செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 837

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.

பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 838

இத்பான்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 839-840

இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். “நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும என் சமூகத்தினரின் பள்ளிவாயிலுக்குமிடையே தண்ணீர் ஓடுகிறது. எனவே தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய தொழுமிடமாக) நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன். ‘இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறி வ்டடு மறுநாள் நண்பகலில் அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காரமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தில் நின்றார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்தபோது நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.

“அல்லாஹ்வின் பொருத்தம் நாடி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறவரின் மீது நரகத்தை இறைவன் ஹராமாக்கிவிட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 841

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாகத் திக்ரு செய்யும் நடைமுறை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 842

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதைத் ‘தக்பீர்’ மூலம் நான் அறிந்து கொள்வேன்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 843

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்;உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)’ என்று முறையிட்டனர்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவிட்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்’ என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்” என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறினார்கள் என அமையும்’. என்று விளக்கம் தந்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 844

முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 845

ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கித் திரும்புவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 846

ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘ஹுதைபிய்யா’ எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

“என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 847

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (இஷாத்) தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப் படுத்திப் பின்னர் எங்களிடம் வந்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நேராக நோக்கி ‘நிச்சயமாக மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்திருப்பதால் தொழுகையில் இருப்பவர்களாகவே ஆவீர்கள்’ என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 848

நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (ஸுன்னத்தான தொழுகைகளைத்) தொழுபவர்களாக இருந்தனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் பேரர் காஸிம் இப்னு முஹம்மத் இவ்வாறு தொழுதுள்ளனர். ‘இமாம் கடமையான தொழுகையைத் தொழுத இடத்தில் உபரியான தொழுகைகளைத் தொழக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துள்ளனர். அது ஆதாரப் பூர்வமானது அன்று.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 849

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் இருப்பார்கள்.

பெண்கள் தம் இல்லம் திரும்பிச் செல்வதற்காகவே அப்படித் தங்கியுள்ளனர் என்று நாம் கருதுகிறோம் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 850

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள். அவர்கள் இல்லம் செல்வதற்கு முன் பெண்கள் தம் இல்லங்களுக்குச் செல்வார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 851

உக்பா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். ‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 852

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தன்னுடைய தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி(ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 853

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். “இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியை நெருங்க வேண்டாம்” என்று கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 854

ஜாபிர்(ரலி) அறிவித்தார். “இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கும் அதாஃ இடம் ‘எதனால் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்?’ என்று இப்னு ஜுரைஜ் கேட்டதற்கு ‘சமைக்கப் படாத பச்சை வெங்காயத்தையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என்று அதாஃ விளக்கமளித்தார்.

மற்றோர் அறிவிப்பில் ‘அதன் துர்வாடையையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்’ என்று அதாஃ கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855

ஜாபிர்(ரலி) அறிவித்தார். “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.

தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது ‘நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 856

அப்துல் அஸீஸ் அறிவித்தார். ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்’ என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) ‘அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது ‘நம்முடன் தொழ வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக் குறிப்பிட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 857

ஸுலைமான் ஷைபானி கூறினார்: ‘நபி(ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர் என்று நபி(ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் எனக்குக் கூறினார்’ என்று ஷஃபீ சொன்னார். அவரிடம் நான் அபூ அம்ரே உமக்கு இதைக் கூறியவர் யார்? என்று கேட்டேன். ‘இப்னு அப்பாஸ்(ரலி)’ என்று அவர் பதில் கூறினார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 858

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.” என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 859

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் ஓரிரவு தங்கினேன். இரவில் ஒரு பகுதி கழிந்ததும் நபி(ஸல்) (உறக்கத்திலிருந்து) விழித்தார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப்பட்டிருந்த தோல் பையிலிருந்து சுருக்கமாக உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) செய்தது போன்று உளூச் செய்து அவர்களின் இடப்புறமாக நின்று கொண்டேன். அவர்கள் என்னைப் பிடித்துத் தம் வலப்புறமாக நிறுத்தினார்கள். பின்னர் அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டு குறட்டைவருமளவு படுத்துறங்கினார்கள். அவர்களிடம் (ஸுப்ஹ்) தொழுகை பற்றி முஅத்தின் அறிவிப்பதற்கு வந்தபோது அவருடன் தொழுகைக்காகச் சென்றார்கள். (மீண்டும்) உளூச் செய்யாமலே தொழுகை நடத்தினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கண்கள் உறங்கும்; உள்ளம் உறங்காது என்று சிலர் கூறுகிறார்களே என்று அம்ரிடம் கேட்டேன். அதற்கவர், ‘நபிமார்களின் கனவுகள் வஹீயாகும்’ என்று கூறிவிட்டு,”மகனே! உன்னை நான் அறுப்பதாகக் கனவு கண்டேன். (திருக்குர்ஆன் 37:102) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 860

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என்னுடைய பாட்டி முலைக்கா(ரலி) விருந்து தயாரித்து நபி(ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் விருந்துண்டார்கள். பின்னர், ‘எழுங்கள்; உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்” என்றார்கள். நான் புழக்கத்தினால் கறுத்துப் போய்விட்ட ஒரு பாயருகே சென்று தண்ணீரால் அதைப் பதப்படுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் (இமாமாக) நின்றார்கள். என்னுடன் (எங்கள் வீட்டில் வளரும்) அனாதைச் சிறுவரும் நின்றார். பாட்டி எங்களுக்குப் பின்னால் நின்றார். நபி(ஸல்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 861

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பெட்டைக் கழுதையின் மேல் ஏறி வந்தேன். அப்போது நான் பருவம் அடையும் வயதை நெருங்கியவனாம் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘மினா’வில் (முன்னால்) சுவர் எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் வரிசைகளுக்கிடையே கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கிக் கழுதையை மேய்வதற்காக அவிழ்த்து விட்டேன். பின்னர் விரிசையில் சேர்ந்து கொண்டேன். இது விஷயமாக எவரும் என்னைக் கண்டிக்கவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 862

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை ஒரு நாள் தாமதப் படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து ‘இந்தப்பூமியில் உங்களைத் தவிர வேறு எவரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை” என்று கூறினார்கள். அன்றைய தினம் மதீனா வாசிகளைத் தவிர வேறு எவரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 863

அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: ‘நபி(ஸல்) அவர்களுடன் (பெருநாள் தொழுகைக்காக வெளியில்) நீங்கள் சென்றதுண்டா?’ என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘ஆம்! எனக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இல்லாதிருந்தால் சிறு வயதுடைய நான் அதில் கலந்து கொண்டிருக்க முடியாது. கஸீர் இப்னு ஸல்த்(ரலி) உடைய இல்லத்தினருகில் உள்ள மேடைக்கு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கப் போதனை செய்தார்கள். தர்மம் செய்யுமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். பெண்கள் தம் ஆபரணங்களை எடுத்து, பிலால்(ரலி) (ஏந்திய) ஆடையில் போடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களும் பிலாலும் இல்லம் திரும்பினார்கள் என்று விடை அளித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 864

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று உமர்(ரலி) கூறியதும் நபி(ஸல்) புறப்பட்டு வந்தார்கள். ‘இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்க வில்லை’ என்றார்கள். அந்த நாள்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப் படவில்லை. இஷாவை அடிவானத்தின் சென்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 865

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 866

உம்மு ஸலமாழூழூ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் ஸலாம் கொடுத்த பின் எழுந்து செல்வார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் தொழுத ஆண்களும் அல்லாஹ் நாடும் அளவுக்கு அமர்ந்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுந்து விடுவார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 867

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுது முடித்ததும் பெண்கள் போர்வைகளால் போர்த்திக் கொண்டு (வீடுகளுக்குப்) புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 868

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்.” என அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 869

ஆயிஷா(ரலி) அறிவித்தார். பெண்கள் இன்று நடந்து கொள்ளும் முறையை நபி(ஸல்) அவர்கள் (இன்று கண்டிருந்தால்) பன}இஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இந்தப் பெண்களையும் (பள்ளிக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள்.

இதனை அறிவித்த உம்ராவிடம் ‘பனு இஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டிருந்தார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘ஆம்’ என்றார் என்று யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 870

உம்முஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 871

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம்(ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்மு ஸுலைம்(ரலி) எங்களுக்குப் பின்னே நின்றார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 872

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகையை இருட்டில் தொழவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருவர் மற்றொருவரை அறிய மாட்டார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 873

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “உங்களின் மனைவியர் (பள்ளிக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அதை மறுக்க வேண்டாம்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 874

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம்(ரலி) உடைய வீட்டில் தொழுதார்கள். நானும் (எங்கள் இல்லத்தில் வளர்ந்த) அனாதைச் சிறுவரும் அவர்கள் பின் நின்றோம். உம்மு ஸுலைம்(ரலி) எங்களுக்குப் பின்னே நின்றார்.

பாகம் 1, அத்தியாயம் 10, எண் 875

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள்.

ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்னால் பெண்கள் திரும்பிச் செல்வதற்காகவே இப்படி நபி(ஸல்) செய்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன் என ஸுஹ்ரி கூறுகிறார்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.