கேள்வி எண்: 37. நல்வாக்கியத்திற்கும், கெட்ட வாக்கியத்திற்கும் அல்லாஹ் தன் திருமறையில் கூறும் உதாரணங்கள் என்ன?
பதில்: “(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது. அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும். பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும். அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை” (அல்குர்ஆன்: 14:24-26)