இன்றைய, நாளைய வாகனத்திற்கான முன்னறிவிப்புகள்

கேள்வி எண்: 16. இன்றைய நவீன வாகனங்களைப் பற்றியும் மற்றும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படப் போகின்ற அதிநவீன வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள இறைவசனம் எது?

பதில்: ‘இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (அ(ல்லாஹ்)வனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல்குர்ஆன்: 16:8)

சிறு விளக்கம்: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த வாகனங்களைப் பற்றிக் குறிப்பிடும் இந்த வசனம், அம்மக்களை நோக்கிக் கூறுகின்றது: “இன்னும் நீங்கள் அரியாதவற்றையும் அவன் படைக்கிறான்” என்று. இந்த வசனம் அவர்களுக்கு மட்டுமின்றி இக்காலத்தில் வாழ்பவர்களுக்கும், ஏன் எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் முன்னறிவிப்புக் கூறக்கூடியதே. நாம் தற்போது உபயோகப்படுத்தும் கார், விமானம் போன்ற வாகனங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாமல் இருந்தது. மேலும் இன்னும் எத்தனையோ நவீன வாகனங்கள் நமக்குப்பிறகு எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட இருக்கின்றது என்பதற்கான முன்னறிவிப்பே இவ்வசனம் எனலாம். அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.