109- (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்னச் சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்த போது நான் கஅபாவின் ஹிஜ்ர் என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி- 3886: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதரருக்கு,
நான் சோர்ந்திருக்கும் சமயங்களில் உங்களால் இங்கு இடப்படும் குர்ஆன் வசனங்கள் எம்மை உற்சாகமூட்டுகின்றன.
இணையத்தில் எதையோ தேடும்போது தவிர்க்க இயலாமல் படிக்க நேரிடும் வசனங்கள். போகும் பாதையில் நன்மையை தேடிய உணர்வை ஏற்படுத்துகின்றது. அதுபோல் http://dailyreadquran.blogspot.comஇங்கு இடப்பட்டு எனது வலைப்பதிவிலும் தமிழ் முஸ்லிம் மன்றம் வலைப்பதிவிலும் தினமும் பார்வைக்கு கிடைக்கும் குர்ஆன் வசனங்களும் ஏதோ ஒரு வகையில் வாசித்தாக வேண்டுமு; என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கி பின்னர் அதை வாசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் தினமும் தேடி ஒரு முறைக்கு பல முறை வாசிக்க செய்கின்றது .
இதனால் தெறிந்Nதூ தெறியாமலோ இதை இடக்கூடிய நீங்களும் வாசிக்ககூடிய மற்றவர்களும் நன்மையை சம்பாதிக்கின்றோம்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி
Something made me to comment on it,..wallahi I felt relaxed. Kepp it up your great job which helps peopel to read Quran as simple as possible.