மனைவி கணவன் பொருளிலிருந்து….

மனைவி கணவன் பொருளிலிருந்து செய்யும் தர்மம்.

602.”முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக – நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாக, தான் ஏவப்பட்டபடி ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1438 அபூ மூஸா (ரலி).


603.”ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை — வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1425 ஆயிஷா (ரலி).


604.கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரின் அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினளார்கள்.

புஹாரி:5192 அபூஹுரைரா (ரலி).


605.ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும் என நபி (ஸல்) அவரகள் கூறினார்கள்.

புஹாரி: 5360 அபூஹுரைரா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.