448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கர்ந்து விட வேண்டும்’ என்று கூறினார்கள்.
449. ‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி (ஸல்) ‘போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
450. ‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரை விட்டும் தூக்கக் கலக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது’ என்று’ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.