கேள்வி எண்: 105. அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் என யாரைக் குறித்து இறைவன் கூறுகிறான்?
பதில்: காலத்தை திடடுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே. இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். புகாரியில் இடம் பெறும் இந்த ஹதீஸை அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி) (புகாரி 6.351)
சிறு விளக்கம்: இன்று நம் சமுதாயத்தவர்கள், திருமணம், நிச்சயதார்த்தம், புதுவீடு குடிபுகுதல் போன்ற எந்த நிகழ்ச்சியானாலும் நல்ல நாள், நல்ல நேரம், கெடட நேரம் பார்த்துதான் தேதியையும், நேரத்தையும் முடிவு செய்கின்றனர். இப்படிச் செய்பவர்கள் அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பதாக அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள். மேலும், ஒருவர் துர்சகுனம் (நல்ல நேரம், கெடட நேரம்) பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின் வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: அஹ்மத்.
எனவே நல்ல நாள், நல்ல நேரம் போன்ற சகுனங்களைப் பார்த்து, மன்னிப்பே கிடைக்காத இணைவைத்தல் எனும் கொடிய பாவச் செயலில் ஈடுபடடு, உயிரினும் மேலான நம் ஈமானை இழந்து விடாமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்.