இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்த கண்ணோட்டம் என்ன?

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்து பலரும் தவறானதொரு கண்ணோட்டம் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வழமையான சடங்குகளான தொழுகையை நிலைநிறுத்துவது, நோன்பு நோற்பது மற்றும் பன்றி இறைச்சி, மது உள்ளிட்ட போதை பொருட்கள் போன்ற விலக்கப்பட்டவைகளிலிருந்தும் விலகி இருப்பது ஆகியன மட்டுமே இறைவழிபாடு என்று கருதுகின்றனர்.

ஆனால், உண்மையில் இவையனைத்தும் இறைவழிபாட்டின் ஒரு பகுதியே! இந்த ஒரு பகுதியை மட்டுமே மக்கள் இஸ்லாமிய இறைவழிபாடு எனும் வரம்புக்குள் வைத்து கணிக்கின்றார்கள்.

மாறாக, இறைவிருப்பத்துக்கு உகந்த வண்ணம் ஒரு மனிதன் கொண்டுள்ள எண்ணம், அவன் மறைவாகவும் வெளிப்படையாகவும் புரிகின்ற செயல்கள் ஆகிய அனைத்தும் இறைவழிபாடேயன்றி வேறில்லை!

வேறொரு வார்த்தையில் கூறினால் இறைஉவப்பை நாடி ஒரு மனிதன் கூறுகின்ற, புரிகின்ற அனைத்தும் இறைவழிபாடே ஆகும். இறைநம்பிக்கை, சமூகசேவை, சகமனிதர்களின் நலனுக்காக செய்யப்படும் தனிப்பட்ட தர்மங்கள் ஆகிய அனைத்தும் இறைவழிபாடே!

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.