அல்லாஹ்வுக்கு நிகராக்கப்பட்ட போலி தெய்வங்களின் கையாலாகாத நிலை!

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்து கிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சி யெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. (அல்குர்ஆன்: 35:13)

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்;; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் – இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (அல்குர்ஆன்:30:40)

இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 16:56)

‘அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்? என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா? என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை’ (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன்: 35:40)

(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?’ என்று அவர்களிடம் கேட்பான். அப்போது அவர்கள் எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை’ என்று நாங்கள் உனக்கு அறிவித்து விடுகிறோம் – என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 41:47)

அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 41:48)

அறிந்து கொள்ளுங்கள், வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை – இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்ப வர்களே. (அல்குர்ஆன்: 10:66)

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.