தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…

194- இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் அல்லாஹ்வின் மீதாணையாக மூஸா விரை வீக்கமுடையவர் எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என இஸ்ரவேலர்கள் கூறிக் கொண்டார்கள். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தமது ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களுடைய ஆடையோடு அந்தக் கல் ஓடி விட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து கல்லே! எனது ஆடை! என்று சப்தமிட்டுக் கொண்டு சென்றார்கள். அப்போது இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்து விட்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினார்கள். மூஸா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா (அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்தக் கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-278: அபூஹூரைரா (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.