193- மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது யாரவர்? எனக் கேட்டார்கள். நான் அபூதாலிபின் மகள் உம்முஹானி என்றேன். உடனே உம்முஹானியே! வருக! எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்தபின் ஒரே ஆடையைச் சுற்றிக் கொண்டவர்களாக எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும் அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹூபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார் என்று கூறினேன். அப்போது உம்முஹானியே! நீ யாருக்கு அடைக்கலம் அளித்திருக்கிறாயோ அவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது.
குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..
புகாரி-357: உம்மு ஹானி (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged அல்லுஃலுவு வல்மர்ஜான். Bookmark the permalink.