190- அபூ ஹூபைஷ் என்பாரின் மகள் பாத்திமா என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். (அதிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? எனக் கேட்டார். அதற்கு இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்று விட்டால் இரத்தம் பட்ட இடத்தை கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் பின்னர் அடுத்த மாதவிடாய் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்து கொள் என்றும் சொன்னார்கள்.
191- உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு வருடங்கள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, குளிக்குமாறு அவர்களிடம் கட்டளையிட்டு, இது நோய் எனக் கூறினார்கள். ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண்மணி குளிப்பவராக இருந்தார்.