‘உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (ஸல்) தகப்பனாக இருக்கவில்லை: எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல்குர்ஆன்: 33:40)
‘அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன்: 59:7)
‘(நபியே! மனிதர்களிடம்) கூறுவீராக. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள்’. (அல்குர்ஆன்: 3:31)