Monthly Archives: January 2009

நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.

1882. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.

நாவினைப் பேணுதல்.

1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நாவினைப் பேணுதல்.

முகஸ்துதி தவிர்.

1880. நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். புஹாரி : 6499 ஜூன்துப் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on முகஸ்துதி தவிர்.

அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதின் சிறப்பு.

1879. உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். புஹாரி : … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதின் சிறப்பு.

இயற்கையின் சீற்றங்களும்… அல்குர்ஆனின் எச்சரிக்கைகளும்…

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா,மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (அல் குர்ஆன் 13:41) நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | 1 Comment

கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!

1878. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!

இறை வேதனைக்கு பயப்படுதல்

1876. ”இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 433 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 1877. மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on இறை வேதனைக்கு பயப்படுதல்

நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!

1869. இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற் புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!

பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | 1 Comment

இறையச்சம் மற்றும் இதயசுத்தி

1865. உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது ‘இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்குதான் நீ அனுப்பப்படுவாய்” என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6515 இப்னு உமர் (ரலி). 1866. … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on இறையச்சம் மற்றும் இதயசுத்தி