Monthly Archives: May 2008

தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

1345. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். புஹாரி : 2919 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

யார் இந்த முஹம்மத் (ஸல்)?

கி.பி. 570….! ஐரோப்பா கண்டம்! கிறிஸ்துவம் முழுமையாக பரவியிராத காலகட்டம் அது! நாம் மேலே சொன்ன இந்த புனித மக்கா மாநகரில் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். தன்னுடைய பிறப்புக்கு முன்னரே தந்தையையும், பிறந்த சிறிது காலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தார்கள். அரபுலகில் கண்ணியத்துக்கு உரியதாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்த அவர், தம்முடைய சிறிய … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged | Comments Off on யார் இந்த முஹம்மத் (ஸல்)?

தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

1338. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

ஆடை அணிகலன்கள். 1337. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5634 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) .

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

எந்த உணவையும் குறை கூறாதே..

1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on எந்த உணவையும் குறை கூறாதே..

இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

1334. இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளன்’ அல்லது ‘நயவஞ்சகன்’ ஏழு குடல்களில் சாப்பிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5394 இப்னு உமர்(ரலி). 1335. ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

நற்செயல்கள் என்பதற்கு அல்லாஹ் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

கேள்வி எண்: 81. நற்செயல்கள் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on நற்செயல்கள் என்பதற்கு அல்லாஹ் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.”.. அல்லது ‘இவருக்கு விருந்தளிப்பவர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..

1329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..