Monthly Archives: April 2008

பலிப் பிராணியைத் தம் கையால் அறுத்துப் பலியிடுதல்

1284. நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள். புஹாரி : 5565 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on பலிப் பிராணியைத் தம் கையால் அறுத்துப் பலியிடுதல்

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள். 1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள். புஹாரி : 985 ஜூன்துப் (ரலி). 1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அறுத்துப் பலியிடும் நேரம்.

விலங்குகளை கட்டி வைத்து அம்பெறியத் தடை.

1278. சில ‘சிறுவர்கள்’ அல்லது ‘இளைஞர்கள்’ கோழியொன்றைக் கட்டி வைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததைக் கண்டு அனஸ் (ரலி) ‘விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 5513 அனஸ் (ரலி). 1279. நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on விலங்குகளை கட்டி வைத்து அம்பெறியத் தடை.

அல்லாஹ் எனும் சொல்லின் பொருள் என்ன?

அல்லாஹ் எனும் சொல் இணை – துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ் எனும் சொல்லின் பொருள் என்ன?

வேட்டையாட சிறு கற்களைப் பயன்படுத்தாதே.

1277. நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது .எந்த எதிரியும் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on வேட்டையாட சிறு கற்களைப் பயன்படுத்தாதே.

முயல் கறி உண்ண ஆகுமானது.

1276. மர்ருழ் ழஹ்ரான், என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்து விட்டார்கள். நான் அதைப் பிடித்து விட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on முயல் கறி உண்ண ஆகுமானது.

வெட்டுக்கிளியை உண்ணலாம்.

1275. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம். புஹாரி : 5495 சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on வெட்டுக்கிளியை உண்ணலாம்.

அல்லாஹ்வுக்கு முன் யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும் ஓர் நாள்!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக. 20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான். 20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வுக்கு முன் யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்து விடும் ஓர் நாள்!

உடும்புக் கறி உண்ணலாம்.

1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி). 1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on உடும்புக் கறி உண்ணலாம்.

அல்லாஹ்வுடையவும், அவன் தூதருடையவும் சாபத்தைப் பெற்ற இவர்கள் யார்?

கேள்வி எண்: 77. ‘வட்டி வாங்கி புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்கு (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்’ என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார்?

Posted in கேள்வி பதில் | 1 Comment