Monthly Archives: October 2006

கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

167-நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, தங்கள் கப்ரில் வேதனைச் செய்யப்படும் இரு மனிதர்களுடைய சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனைச் செய்யப்படவில்லை, என்று சொல்லி விட்டு, ஆம்! (அது பெரிய விஷயம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்

வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

166- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து எங்களில் ஒருத்தியின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த இடத்தைச் சுரண்ட வேண்டும், பின்னர் அதைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும், பின்னர் அந்தத் துணியுடன் நீ தொழுது கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….

இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

43:26. இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்; 43:27. “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்) . அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்று கூறியதையும் நினைவு கூறுவீராக)! 43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

165- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆடையில் படும் இந்திரியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடையில் பட்ட இந்திரியத்தைக் கழுவுவேன். அந்த ஆடையோடு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காகச் செல்வார்கள். கழுவியதால் ஏற்பட்ட ஈரம் அவர்களுடைய ஆடையில் ஆங்காங்கே காணப்படும் என்று கூறினார்கள். புகாரி-231: ஸுலைமான் பின் யஸார் (ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஆடையில் பட்ட இந்திரியத்தை……..

அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன்: 60:23)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்” (24:27) அனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். ‘அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்

நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

164- நான் (பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள். அப்போது அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் சொல்லி (சிறுநீர்பட்ட இடத்தில்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்

இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!

சிறு குழந்தைகளின் சிறுநீர்……..

163- நபி (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டு வரப்படுவதுண்டு. அப்போது குழந்தைகளுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் தெளித்தார்கள். (அதிகமாகத் தண்ணீர் ஊற்றி) அதனைக் கழுவவில்லை. … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on சிறு குழந்தைகளின் சிறுநீர்……..