Monthly Archives: July 2006

ஷஹீத்!

தன் உயிரை உடமையைக் காக்கப் போராடி உயிர் விட்டவன் ஷஹீது என்பது பற்றி……… 85- தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் (ஷஹீது) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-2480: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஷஹீத்!

அறிந்து கொண்டும் அறிவீனர்களாக இருப்பவர்கள் பற்றி..

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்;(ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை – நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் – இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 39:22)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அறிந்து கொண்டும் அறிவீனர்களாக இருப்பவர்கள் பற்றி..

பொய் சத்தியம்

ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க பொய் சத்தியம் செய்பவன் குறித்து…….. 84- ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்கு மூல)த்தின் போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on பொய் சத்தியம்

இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம்

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் – (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும், தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்குர்ஆன்: 3:19)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம்

ஷைத்தானிய எண்ணம்

ஒரு விசுவாசியின் உள்ளத்தில் எழும் கெட்ட எண்ணம் குறித்து…… 83- மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்விகேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில்,அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ், இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7296: அனஸ் பின் மாலிக்(ரலி) 82- உங்களில் ஒருவரிடம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஷைத்தானிய எண்ணம்

தெளிவான ஆதாரங்கள்

நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன! எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ – அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ – அது அவருக்கே கேடாகும். ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன் – 6:104)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தெளிவான ஆதாரங்கள்

வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

வேலைக்காரனுக்கு அவனுடைய உரிமையை (கூலியை) விரைவாக வழங்கிட நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். ‘வேலைக்காரனுக்கு அவனுடைய வேர்வை உலர்வதற்குள் கூலியை கொடுத்து விடுங்கள்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம். முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் பல்வேறு அநியாயங்களில் தொழிலாளர்கள், பணியாளர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை வழங்காதிருப்பது ஒன்றாகும். இதற்குப் பல்வேறு … Continue reading

Posted in எச்சரிக்கை | Comments Off on வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காதிருத்தல்

தர்மமும், அதனைத் தொடர்ந்த நோவினையும்…

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். 2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on தர்மமும், அதனைத் தொடர்ந்த நோவினையும்…

நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..

79 – என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-5269: அபூஹுரைரா(ரலி) 80- உங்ளில் ஒருவர் தமது இஸ்லாத்தை அழகாக்கிக் கொண்டால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..

மனிதனின் நன்றி மறக்கும் குணம் பற்றி..

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர்,(இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித் தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான்; அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (அல் குர்ஆன்: 39:8)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதனின் நன்றி மறக்கும் குணம் பற்றி..