Category Archives: தினம் ஒரு வசனம்

நாம் நன்றி செலுத்தத் தகுதியானவன்!

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் (அருளால்) உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத்தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன்: 28:73)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நாம் நன்றி செலுத்தத் தகுதியானவன்!

வேத எச்சரிக்கையால் பயன் பெறுவோர் யார்?

“நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை” (அல்குர்ஆன்: 6:51)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வேத எச்சரிக்கையால் பயன் பெறுவோர் யார்?

மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன்!

(நபியே) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் (நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்த போது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்? என்று கேட்பான்; அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 5:199)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மறைவானவற்றை முற்றிலும் அறிந்தவன்!

என்னுடைய அனைத்து வழிபாடும்…..

(நபியே) நீர் கூறும்: என்னுடைய தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும், (அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அல்குர்ஆன்: 6:1620)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on என்னுடைய அனைத்து வழிபாடும்…..

நமக்கு கஷ்டத்தை அல்லாஹ் நாடவில்லை

ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நமக்கு கஷ்டத்தை அல்லாஹ் நாடவில்லை

வானங்களையும் பூமியையும் படைத்தோனே!

யூஸுஃப் நபி (அலை) ‘இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.” … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வானங்களையும் பூமியையும் படைத்தோனே!

சத்தியம் Vs அசத்தியம்

அ(ல்லாஹ்)வன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சத்தியம் Vs அசத்தியம்

கேள்வி கணக்கு கடினம் சிலருக்கு ஏன்?

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on கேள்வி கணக்கு கடினம் சிலருக்கு ஏன்?

பலஹீனர்களே! செவிமடுப்பீர்!

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது: தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன்: 22:73)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on பலஹீனர்களே! செவிமடுப்பீர்!

மற்றவரின் பாவச் சுமையை நான் சுமப்பேனா?

அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருட்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் – பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டை தேடிக் கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பி செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மற்றவரின் பாவச் சுமையை நான் சுமப்பேனா?