Category Archives: தினம் ஒரு வசனம்

உனக்கு நீயே நன்மை செய்து கொள்கிறாய்

“எவன் இறைவனுக்கு நன்றி செலுத்தினானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை. நிச்சயமாக என் இறைவன் எவருடைய தேவையற்றோனும், மிக்க கண்ணியமானவனுமாக இருக்கிறான்”. (அல்குர்ஆன்: 27:40)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உனக்கு நீயே நன்மை செய்து கொள்கிறாய்

எவரேனும் நன்மை செய்தால்….

“எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”. (அல்குர்ஆன்: 41:46)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on எவரேனும் நன்மை செய்தால்….

தன் படைப்புகளிடம் தேவையற்ற இறைவன்

“நீங்கள் நிராகரித்து விட்டாலும் அதாவது உங்கள் குஃப்ரினாலும் அவனுக்கு நஷ்டமில்லை. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தேவை இல்லாதவனாக இருக்கிறான். எனினும் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்”. (அல்குர்ஆன்: 39:7)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on தன் படைப்புகளிடம் தேவையற்ற இறைவன்

இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது. (அல்குர்ஆன்: 22:70)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது

இறைவசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்…

இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடுரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது தான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறைவசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால்…

அல்லாஹ்வின் உதவியற்ற மக்கள்!

மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. (அல்குர்ஆன்: 22:71)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் உதவியற்ற மக்கள்!

புகழ் மிக்க அர்ஷின் அதிபதி!

“அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?”. (அல்குர்ஆன்: 32:4)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on புகழ் மிக்க அர்ஷின் அதிபதி!

மகத்துவமிக்க அல்லாஹ்வின் சாட்சி!

(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சி கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன். (அல்குர்ஆன்: 4:166)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மகத்துவமிக்க அல்லாஹ்வின் சாட்சி!

மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் நாள்!

(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்டவெளியாக காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர்ஆன்: 18:47)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் நாள்!

மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்!

அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்). (அல்குர் ஆன்: 18:48)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மனிதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்!